தலையணை உறையை துவைக்காமல் அழுக்காகவே பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்து தெரியுமா?
வாரத்திற்கு ஒருமுறை தலையணை உறையை மாற்ற வேண்டியதன் அவசியம் குறித்து இங்கு காணலாம்.
சருமத்தை பாரமரிக்க முதலில் நம்முடைய தலையணை உறைகளை முறையாக சுத்தம் செய்ய வேண்டும். அதை வாரம்தோறும் மாற்றுவது அவசியம் என்கிறார் தோல் பராமரிப்பு நிபுணர் கீதிகா மிட்டல். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில், வாரத்திற்கு ஒரு முறை தலையணை உறையை மாற்றுவதன் முக்கியத்துவத்தையும் தலையணை உறையினால் பரவும் பாக்டீரியாக்கள் குறித்தும் தெரிவித்துள்ளார்.
தலையணையை மாற்றுவதன் அவசியம் தெரியவில்லை என்றால், ஒவ்வொரு நாளும் இறந்த சரும செல்கள், பாக்டீரியாக்களுடன் நாம் தூங்குவதற்கான வாய்ப்பு ஏற்படுகிறதாம். வாரம் ஒருமுறை தலையணை உறையை மாற்றுவது அல்லது துவைத்து பயன்படுத்துவது சருமத்திற்கு நல்லது என்பதை தோல் பராமரிப்பு நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
நம்முடைய தலையணை உறையில் தூசி, அழுக்கு, எண்ணெய், செல்லப்பிராணிகளின் முடி, இறந்த செல்கள், பாக்டீரியா ஆகிய பல தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இருக்கலாம். நாம் சரியான தோல் பராமரிப்பு வழக்கத்தை கொண்டிருந்தாலும், தலையணை உறையை மாற்றாமல் இருந்தால் அனைத்தும் வீண் தான்.
இதையும் படிங்க: வெறும் 10 நிமிடங்களில் கருவளையம் நிரந்தரமா போகணுமா.. வீட்டுல இருக்கிற இந்த ஒரு பொருள் போதும்..
தலையணை உறையில் உள்ள பாக்டீரியா, அழுக்கு போன்றவை சரும வெடிப்பை உண்டாக்கும். பட்டுத் தலையணை உறைகளைப் பயன்படுத்தினால் சருமத்தை மேம்படுத்தலாம். இதனால் முடியின் ஆரோக்கியமும் மேம்படும். அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், பருத்தி போர்வைகளை பயன்படுத்துபவர்களுடன் ஒப்பிடும்போது பட்டு போர்வைகளை உபயோகம் செய்பவர்களுக்கு பரு போன்ற பிரச்சனை குறைவாக உள்ளதாம். பிற துணிகளை விட பட்டுத்துணிகள் சருமத்திற்கு மென்மையாக இருப்பதே இதற்கு காரணம் எனவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
பட்டுத்துணியால் ஆன போர்வை நமது முகத்தில் உள்ள எண்ணெயை குறைவாக உறிஞ்சுகிறது. சரும பராமரிப்பில் தலையணை உறையை துவைத்து பயன்படுத்துவதை உறுதி செய்தால் பாதி பிரச்சனைகள் முடிந்துவிடும்.
இதையும் படிங்க: ஐஸ்வர்யா ராயின் அசரடிக்கும் அழகின் சீக்ரெட் என்ன? இவ்வளவு பணம் இருந்தும் சிம்பிளா அவர் செய்யும் காரியம்..