ஐஸ்வர்யா ராயின் அசரடிக்கும் அழகின் சீக்ரெட் என்ன? இவ்வளவு பணம் இருந்தும் சிம்பிளா அவர் செய்யும் காரியம்..
actress aishwarya rai beauty Secret: உலக அழகி போல் அழகான சருமமும், கூந்தலும் வேண்டும் என விரும்பாதவர்கள் உண்டா? அதற்காக நிறைய பணம் செலவழிக்க வேண்டாம். உலக அழகி பட்டத்தையே தனதாக்கிய ஐஸ்வர்யா ராய் சொல்லும், அழகின் ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
தன் அழகால் இந்திய திரைப்பட உலகை மட்டுமின்றி, உலகையே திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய். அவருடைய அழகை கண்டு வியக்காதவர்களே இருக்க முடியாது. தன்னுடைய 49 வயதிலும் இளமையைத் தக்க வைத்திருக்கும் மாயாஜாலக்காரி என்றே அவரை சொல்லலாம். அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் பாகம்-1 இல் 'உயிர் உங்களுடையது தேவி' என சரணடைந்தது வந்தியத்தேவன் மட்டுமில்லை, நாமும் தானே! எப்படி அவருக்கு இவ்வளவு அழகான சருமமும், கூந்தலும் இருக்கிறது என்பதில் பலருக்கும் ஆச்சர்யம் உள்ளது.
நம்மை படைத்த இறைவன் தானே உலக அழகிகளையும் படைக்கிறார். அவர்களுக்கு மட்டும் அழகு எங்கிருந்து வருகிறது என சில பெண்கள் நினைப்பதும் உண்டு. உலக அழகி என்றால் நினைவுக்கு வரும் ஐஸ்வர்யா ராய், தனது சருமத்தை எப்படி கவனித்துக் கொள்கிறார் என்பது தெரிந்தால், உங்களுடைய பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.
Image: Getty Images
நடிகை ஐஸ்வர்யா ராய் தன்னுடைய சரும பராமரிப்பில் சில இயற்கை அழகு குறிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். அதுவும் நம் வீட்டு சமையலறை பொருள்களை வைத்தே அந்த பேஸ் பேக்கை போட முடியும். நீங்களும் அவரைப் போன்ற தோற்றத்தைப் பெற விரும்பினால், இந்த பிரத்யேக பேஸ் பேக்கை போட்டால் போதும். இந்த பேஸ் பேக்கில் கடலை மாவு, பால், மஞ்சள் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.
ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி கடலை மாவு, அதனுடன் 2 தேக்கரண்டி பால் சேர்த்துவிடுங்கள். இதனை நன்றாக கலக்கி வைத்து கொள்ளுங்கள். பிறகு அதனுடன் சிறிது மஞ்சள் தூளையும் கலந்து கொள்ளுங்கள். நல்ல பேஸ்ட் பதத்திற்கு வந்ததும் முகத்தில் இதை பூசி கொள்ளுங்கள். சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் இந்த பேஸ் பேக் உலரும் வரை காத்திருங்கள். அதன் பின்னர் நன்கு தேய்த்து கழுவி கொள்ளுங்கள். ஒரு வாரத்தில் இதனை 2 முதல் 3 தடவை செய்யலாம். அப்படி செய்து வர ஐஸ்வர்யா ராய் போல பளபளப்பான சருமத்தை பெறுவீர்கள்.
இதையும் படிங்க: உலக பணக்காரரின் மனைவியாக இருந்தும் கூச்சமே இல்லாமல் நீதா அம்பானி செய்த காரியம்... வியக்கும் பிரபலங்கள்
Image: Aishwarya Rai Bachchan/Instagram
முகத்திற்கு பேஸ் பேக் போடுவதோடு முடிந்துவிடுவதில்லை. நாள்தோறும் 7 முதல் 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். உங்கள் உடலை நீரேற்றமாக வைப்பது அவசியம். சரும, முடி ஆகியவை ஆரோக்கியமாக இருக்க உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும். தினமும் வேகவைத்த காய்கறிகளை 1 கிண்ணம் சாப்பிடுங்கள். இதனால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். ஐஸ்வர்யா ராய் துரித உணவுகளை விரும்புவதில்லை, சத்தான உணவுகளையே எடுத்து கொள்கிறார். அவரைப் போல அழகில் ஜொலிக்க வேண்டும் என்றால், இந்த டிப்ஸை தொடர்ந்து செய்யுங்கள்.
இதையும் படிங்க: இந்த ராசியினருக்கு 'காதலில் கண்டம்'.. என்ன பண்ணாலும் பிரேக் - அப் தான் ஆகும்... ஏன் தெரியுமா?