- Home
- உடல்நலம்
- அழகு குறிப்புகள்
- Hair Growth Drinks : தினமும் பாலில் இந்த '1' பொருள் கலந்து குடிங்க.. ஒரு முடி கூட உதிராது! காடு மாதிரி அடர்த்தியா வளரும்
Hair Growth Drinks : தினமும் பாலில் இந்த '1' பொருள் கலந்து குடிங்க.. ஒரு முடி கூட உதிராது! காடு மாதிரி அடர்த்தியா வளரும்
முடி உதிர்வைத் தடுக்க பால் உதவும் என்பது பலரும் அறியாத விஷயம். பாலில் இங்கு சொல்லப்பட்டுள்ள பொருளை கலந்து, தினமும் குடித்து வந்தால் முடி உதிர்வு பிரச்சனையை குறைக்கலாம்.

Healthy Drinks For Hair Growth
முடி உதிர்தல் என்பது நம் அனைவரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை. இதை கட்டுப்படுத்த பலர் விலையுயர்ந்த எண்ணெய்கள், ஷாம்புகளை பயன்படுத்துகிறார்கள். இருப்பினும் அவை அனைத்தும் தற்காலிகமான தீர்வை மட்டுமே தருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், பாலில் சில பொருட்களை கலந்து குடிப்பது மூலம் முடி உதிர்தல் நின்று, ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவும். அவை என்னென்ன? அதை எப்படி குடிக்க வேண்டுமென்று இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மஞ்சள் பால்
மஞ்சளில் உள்ள குர்குமின் உச்சந்தலை எரிச்சலைக் குறைத்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். ஒரு கிளாஸ் பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள் கலந்து இரவில் குடித்தால் பொடுகு குறைந்து முடி அழகாகும்.
பாதாம் பால்
பாதாமில் உள்ள பயோட்டின், வைட்டமின் ஈ முடிக்கு பளபளப்பைத் தந்து, உதிர்வைக் குறைக்கும். ஊறவைத்த பாதாம், பேரீச்சையை அரைத்து, வெதுவெதுப்பான பாலில் கலந்து குடிப்பது முடி வளர்ச்சிக்கு நல்லது.
குங்குமப்பூ பால்
குங்குமப்பூ உச்சந்தலை இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி முடி உதிர்வைக் குறைக்கும். சூடான பாலில் குங்குமப்பூ இழைகளைச் சேர்த்து குடிக்கலாம். பேரீச்சையில் உள்ள இரும்புச்சத்து முடி வளர்ச்சிக்கு உதவும்.
வெந்தயம்
வெந்தயத்தில் உள்ள புரதம் மற்றும் இரும்புச்சத்து முடியின் வேர்களை வலுப்படுத்தி, பொடுகைக் குறைக்கும். ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து பாலில் கலந்து குடிப்பது முடி வளர்ச்சிக்கு நன்மை பயக்கும்.
