- Home
- உடல்நலம்
- அழகு குறிப்புகள்
- Hair Fall : இந்த உணவுகளை சாப்பிடாதீங்க! முடி கொத்து கொத்தா கொட்டும்; ஜாக்கிரதை!
Hair Fall : இந்த உணவுகளை சாப்பிடாதீங்க! முடி கொத்து கொத்தா கொட்டும்; ஜாக்கிரதை!
முடி உதிர்தலுக்கு பல காரணங்கள் இருந்தாலும் நாம் சாப்பிடும் சில உணவுகள் கூட முடி கொட்டுதலுக்கு காரணமாக அமைகிறது. அவற்றின் பட்டியல் இதோ.

Worst Foods for Hair Fall
தற்போது முடி உதிர்தல் பிரச்சனையை பலரும் அனுபவிக்கிறார்கள். முடி உதிர்தலை தடுக்க பலரும் பல விதமான முயற்சிகளை செய்வார்கள். சிலரோ ஷாம்புகளை மாற்றுவார்கள். இன்னும் சிலர் விதவிதமான எண்ணெய்களை பயன்படுத்துவார்கள். முடி உதிர்களுக்கு பல காரணங்கள் இருந்தாலும், நாம் சாப்பிடும் சில உணவுகளாலும் முடி உதிரும் தெரியுமா? சொல்லபோனால் அத்தகைய உணவுகள் முடியின் வேர்களை மிகவும் பலவீனமாக்கும். இந்தப் பதிவில் முடி உதிர்தலுக்கு காரணமாகும் சில உணவுகள் பற்றி பார்க்கலாம்.
இனிப்புகள்
இனிப்புகள் உடல்நலத்திற்கு நல்லதல்ல. இது உடல் எடையை அதிகரிப்பதோடு, முடி ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. சர்க்கரை இன்சுலினை அதிகரித்து, ஆண்ட்ரோஜன் ஹார்மோன்களை உயர்த்தி முடி உதிர்வை ஏற்படுத்தும்.
வெள்ளை பிரட், மைதா பொருட்கள்
மைதா உணவுகள், வெள்ளை பிரட் இரத்த சர்க்கரையை அதிகரிக்கும். இது ஆண்ட்ரோஜன் ஹார்மோன்களை உயர்த்தி முடி உதிர்வை ஏற்படுத்தும். ஜங்க் ஃபுட்ஸில் உள்ள கொழுப்புகள் முடிக்கு ஊட்டச்சத்து செல்வதைத் தடுக்கும்.
உப்பு அதிகம் உள்ள உணவுகள்
அதிக உப்பு சோடியத்தை அதிகரித்து, முடியை வறண்டு போகச் செய்யும். ஆல்கஹால் உடலை நீரிழக்கச் செய்து முடியை பலவீனமாக்கும். அதிக கொழுப்புள்ள பால் பொருட்கள் செபம் உற்பத்தியை அதிகரித்து முடி உதிர்வை ஏற்படுத்தும்.
சோடா, கார்பனேற்றப்பட்ட பானங்கள்
குளிர்பானங்கள், சோடா போன்றவற்றில் உள்ள சர்க்கரை முடிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைத் தடுக்கும். முடி உதிர்வைக் கட்டுப்படுத்த கீரைகள், நட்ஸ், தயிர், பழங்கள் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.