- Home
- உடல்நலம்
- அழகு குறிப்புகள்
- Expired Soap : குளியல் சோப்பு கெட்டு போகுமா? சோப்பு போடும் முன் இதை கவனிங்க!!
Expired Soap : குளியல் சோப்பு கெட்டு போகுமா? சோப்பு போடும் முன் இதை கவனிங்க!!
நீங்கள் பயன்படுத்தும் குளியல் சோப்பு காலாவதி ஆகுமா? அப்படி அதை பயன்படுத்தினால் என்னென்ன சரும பிரச்சினைகள் வரும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

குளியல் சோப்பு காலாவதி ஆகுமா?
நாம் சாப்பிடும் உணவு முதல் பயன்படுத்தும் பொருட்கள் வரை என அனைத்திற்கும் காலாவதி தேதிகள் உண்டு. அந்த லிஸ்டில் குளியல் சோப்பும் உண்டு. காலாவதியான குளியல் சோப்பு சருமத்திற்கு மோசமான தீங்கு விளைவிக்கக்கூடும் தெரியுமா? அது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
காலாவதியான சோப்பு பயன்படுத்தலாமா?
சோப்பு நம்முடைய தினசரி வாழ்க்கையில் ஒரு முக்கியமான பொருள். பாத்திரங்களை கழுவுதல், துணிகள் துவைப்பது மற்றும் குளியல் போன்ற அனைத்திற்கும் சோப்பு பயன்படுத்துகிறோம். ஆனால் எந்தவொரு பொருளுக்கும் ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டு காலம் இருக்கும். அதுபோல தான் சோப்புக்கும் காலாவதி தேதி உள்ளன. அந்த குறிப்பிட்ட தேதிக்கு பிறகு சோப்பு பயன்படுத்தினால் சில பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
உண்மையில், காலாவதியான சோப்பில் வண்ணம், மணம், மற்றும் உருமாற்றத்தில் மாறுதல்கள் ஏற்படும். இதுதவிர அது உலர்ந்து விரிசல் ஏற்படும் அல்லது உருகி போகலாம். சில சமயங்களில் காலாவதியான சோப்பில் கிருமிகள் வளரும். ஆகவே, காலாவதியான சோப்பை பயன்படுத்தினால் அது சருமத்திற்கு பெரும் பாதிப்பை தான் ஏற்படுத்தக் கூடும்.
காலாவதியான சோப்பு பக்க விளைவுகள்:
சோப்பில் இருக்கும் ரசாயனங்கள் வேறுபட்டிருப்பதால், காலாவதியான சோப்பு பயன்படுத்தினால் சிலருக்கு சரும வறட்சி, ஒவ்வாமை போன்ற சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதிலும் குறிப்பாக சென்சிட்டிவ் சருமம் (sensitive skin) உள்ளவர்களுக்கு இதன் தாக்கம் மிக அதிகமாகவே இருக்கும்.
சோப்பின் முக்கிய பணி கிருமிகளை அழிப்பது தான். காலாவதியான சோப்பு கிருமிகளை எதிர்க்கும் சக்தியை இழந்து விடும் என்பதால் அதை பயன்படுத்தும் போது கிருமிகளை அழிப்பதற்கு பதிலாக, புதிய தொற்றுகளை தான் ஏற்படுத்தும். அதுவும் குறிப்பாக குளியலுக்கு பயன்படுத்தும் சோப்பு காலாவதியாகிவிட்டால் அது பல சரும நோய்த் தொற்றுகளை உண்டாக்கும்.
காலாவதியான சோப்புகளை என்ன செய்யலாம்?
உங்களுக்கு காலாவதியான சோப்பை குப்பையில் போடுவதற்கு மனமில்லை என்றால் அதை வேறு சில வழிகளில் பயன்படுத்தலாம். உதாரணமாக டாய்லெட் அல்லது தரையை சுத்தம் செய்ய பயன்படுத்தலாம்.
குறிப்பு : காலாவதியான சோப்பை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம். இல்லையெனில் அது உங்களது கருமத்திற்கு தான் தீங்கு விளைவிக்கும். ஆகவே, சரியான தேதியில் அவற்றை பயன்படுத்துங்கள். இல்லையென்றால் மாற்று வழிகளில் உபயோகிக்கலாம்.