Combing the hair: பெண்கள் தினமும் தலைமுடியை சீவிக் கொண்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
தலைமுடியை அடுத்த நாள் கூட வாரிக் கொள்ளலாம் என்று இருந்து விடுகிறார்கள். இந்த தலை சீவுதல் என்பது அழகு மற்றும் சுத்தம் சார்ந்த விஷயம் மட்டுமல்ல. இதனால் பல நன்மைகளும் நமக்கு கிடைக்கும்.
நாம் அனைவருமே தினசரி தலை சீவுவதை வழக்கமாக கொண்டுள்ளோம். ஆண்களை விட பெண்களுக்கு தான் தலை சீவுவதற்கு அதிக நேரம் ஆகிறது. தினந்தோறும் தலை சீவுவதனால் தலையில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். திருமணமான பெண்களுக்கு பெயர் தான் இல்லத்தரசிகள். ஆனால் நாள் முழுவதும் நிற்க கூட நேரமில்லாமல் பம்பரமாய் சுழன்று வேலை செய்து கொண்டிருப்பார்கள். சமையல் வேலைகள், வீட்டு வேலைகள், பிள்ளைகளை கவனித்துக் கொள்ளுதல், வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கான தேவைகளை நிறைவேற்றுதல் என அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு, தனக்கான வேலைகளை செய்து கொள்ள அவர்களால் நேரமே ஒதுக்க முடியவில்லை.
hair
தலை சீவுதல்
சில பெண்கள் தன்னை அழகுபடுத்திக் கொள்வதற்கு கூட அவர்களால் நேரத்தை ஒதுக்க முடியவில்லை. இதில் சில பெண்கள் பெரும்பாலும் தவறவிடும் பிழை எதுவென்றால், காலையில் வேலையைத் தொடங்குவதற்கு முன்பாக, தலைமுடியை அள்ளி முடிந்தார்கள் என்றால் அன்றைய நாள் முழுவதும் அப்படியே இருந்து விடுவார்கள். தலைமுடியை அடுத்த நாள் கூட வாரிக் கொள்ளலாம் என்று இருந்து விடுகிறார்கள். இந்த தலை சீவுதல் என்பது அழகு மற்றும் சுத்தம் சார்ந்த விஷயம் மட்டுமல்ல. இதனால் பல நன்மைகளும் நமக்கு கிடைக்கும்.
ஆரோக்கியமான தலைமுடியைப் பெற நீங்கள் விரும்பினால், தினந்தோறும் பின்பற்ற வேண்டிய மிக முக்கியமான ஒரு முடி பராமரிப்பு வழக்கம் தான் தலை முடியை சீவுவது. வறண்ட தலைமுடி கொண்டவர்கள் அல்லது அதிகமான தலைமுடி உதிர்தலை சந்திப்பவர்கள், கூடுதலான தலைமுடி இழப்பைத் தவிர்ப்பதற்கு சீப்புவைப் பயன்படுத்த தயங்குவார்கள். ஆனால், சீப்பு பயன்படுத்தி தலை சீவுவது தான் மிகவும் சிறந்தது.
Neck Darkness: கழுத்தில் இருக்கும் கருமையை நீக்க இதைச் செய்தால் போதும்!
தலை சீவுவதன் நன்மைகள்
தலை முடியை சீவுவதற்கு சீப்புவைப் பயன்படுத்துவது ஒரு சுயப் பாதுகாப்பு நடைமுறை மட்டுமின்றி, பல அறிவியல் நன்மைகளையும் கொண்டுள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
நாள்தோறும் கூந்தலை சீவி விடுவதால் தலையில் இருக்கும் அழுக்கு மற்றும் இறந்த செல்கள் போன்றவை வெளியேறி விடும்.
உச்சந்தலையில் சீப்பு படும்போது இரத்த ஓட்டம் சீராக அதிகரிக்கிறது.
உச்சந்தலையில் உள்ள செபேசியஸ் சுரப்பிகள் சுரக்கப்பட்டு, சீவம் எனும் எண்ணெயை உற்பத்தி செய்து, இயற்கையாகவே தலைமுடியை வளரச் செய்கிறது.
தினசரி தலை சீவுவது உச்சந்தலையையும், கூந்தலையும் சுவாசிக்க அனுமதிக்கிறது மற்றும் பொடுகு நிறைந்திருக்கும் தலைமுடியைப் புதுப்பிக்கிறது.
தலைமுடியை தினசரி சீவுவது, தலைமுடியை பளபளப்பாக வைக்கவும், அடர்த்தியை அதிகரிக்கவும, ஆரோக்கியமாக மற்றும் புத்துணர்ச்சியுடனும் பராமரிக்க உதவி புரிகிறது.
ஆகவே, நாம் அனைவருமே தினந்தோறும் இரண்டு தடவைக்கும் அதிகமாக கூந்தலை வார வேண்டும். இது ஆரோக்கியத்திற்கும், தலைமுடி வளர்ச்சிக்கும் பெரிதும் துணை புரியும்.