Neck Darkness: கழுத்தில் இருக்கும் கருமையை நீக்க இதைச் செய்தால் போதும்!
கழுத்துப் பகுதி மட்டும் கருமையான நிறத்தில் பார்ப்பதற்கும் பொலிவிழந்து காணப்படும். இதனால் பலர் ஒருவிதமான மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், முதற் காரணம் கழுத்துப் பகுதியில் பராமரிப்பு இல்லாதது தான்.
dark circles in neck
இன்றைய நவநாகரீக உலகில், இள வயது ஆண்கள் மற்றும் பெண்கள் உடல் முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ இல்லையோ! ஆனால், முக அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஏனெனில், தங்களை மற்றவர் முன்னிலையில் அழகாக காட்டிக் கொள்ளவே பலரும் விரும்புகின்றனர். அதற்காக பலரும் பல வகைகளில் பல முயற்சிகளை செய்து வருகின்றனர். நம்மில் சிலருக்கு முகம் பார்ப்பதற்கு சிவந்த நிறத்திலும், அழகாகவும் இருக்கும். ஆனால், கழுத்துப் பகுதி மட்டும் கருமையான நிறத்தில் பார்ப்பதற்கும் பொலிவிழந்து காணப்படும். இதனால் பலர் ஒருவிதமான மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், முதற் காரணம் கழுத்துப் பகுதியில் பராமரிப்பு இல்லாதது தான்.
black neck in women
கழுத்தில் கருமை நிறம்
முகம் ஒரு நிறமாகவும், கழுத்து மற்றொரு நிறமாகவும் இருப்பது பார்ப்பவர்களுக்கும் சரி, அந்த நபருக்கும் சரி அதிக கூச்சத்தையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தி விடுகிறது. வெயிலில் அதிகமாக அலைவது, கழுத்தில் செயின் அணிந்திருப்பது மற்றும் கழுத்துப் பகுதியை சரியாக பராமரிக்காமல் இருப்பது ஆகியவற்றால் கழுத்துப் பகுதி கருமையாக இருக்க வாய்ப்புகள் உள்ளது. இரு்பினும், இது கவலைக்குரிய விஷயம் அல்ல. இதனை மிக எளிதாக சரி செய்து விடலாம்.
கழுத்தின் கருமையை நீக்கும் வழிகள்
எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு தேன் ஆகிய இரண்டையும் கலந்து, கழுத்தில் தேய்த்தால் கருமை நிறம் நீங்கி விடும்.
பயத்தம் மாவு, ரோஸ் வோட்டர் மற்றும் ஆலிவ் ஆயில் ஆகியவற்றை கலந்து, கழுத்தில் பூசினாலும் கருமை நிறம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விடும்.
பப்பாளி, எலுமிச்சை மற்றும் ஆரஞ்ச் ஆகிய பழங்களின் தோல்களை நீக்கி விட்டு, கழுத்தைச் சுற்றி தேய்த்து வந்தால் கருமை நிறம் நீங்கி விடும்.
கற்றாழையை எடுத்து அதன் மேற்புறத் தோலை நீக்கி விட்டு, சதையை மட்டும் எடுத்து கழுத்து முழுவதும் பூச வேண்டும். சிறிது நேரத்திற்கு பின்பு கழுத்தை கழுவி விட வேண்டும். தொடர்ந்து இப்படிச் செய்வதால் கருமை நிறம் நீங்கும்.
Lice Infestation: பேன் தொல்லையால் அவதியா? இதோ ஒருசில எளிய டிப்ஸ்!
தயிரை எடுத்து கழுத்துப் பகுதி முழுவதும் மசாஜ் செய்து, சுமார் 20 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் துடைத்து எடுக்க கருமை நிறம் நீங்கும்.
உருளைக் கிழங்கின் சாற்றை எடுத்து, கழுத்துப் பகுதியில் தேய்த்து வந்தாலும் கருமை நிறம் மாறும்.
மேற்கண்ட எளிய முறைகளைப் பின்பற்ற வீட்டிலுள்ள பொருட்களே போதும். ஆகவே, இந்த வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்றி மிகவும் எளிதாக கழுத்தில் உள்ள கருமையை நீக்கி விடலாம்.