சருமத்துக்கு ஆரோக்கிய அற்புதத்தை வழங்கும் காபித் தூள்..!!
தினமும் காபி குடித்தால் தான் பலருக்கும் அன்றையே நாளே சிறப்பாக அமையும். வெறும் மனித ஓட்டத்துக்கு மட்டுமில்லாமல், சரும பராமரிப்பு சிறப்பாக அமைவதற்கும் காபி பொடி வழிவகை செய்கிறது.
Image Credit: Instagram
காலையில் எழுந்ததும் பலருக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் பானமாக இருப்பது காபி அல்லது தேநீர். நாம் தமிழ்நாட்டில் வாழ்வதால், பலரும் காலையில் காபி தான் அருந்துகின்றனர். ஒருசிலருக்கு காபியை குடித்தால் மட்டுமே அன்றைய நாளே ஓடும். எனினும் காபி குடிப்பதில் உடலுக்கு மட்டுமில்லாமல், நம்முடைய சருமத்துக்கும் புத்துணர்ச்சி கிடைக்கிறது. காபி மூலம் சருமம் பளபளப்பு பெறுகிறது, தோலின் காணப்படும் வறட்சி மறைகிறது மற்றும் சருமம் பொலிவு பெறுகிறது. இதற்கு சில செயல்முறைகளை நாம் பின்பற்ற வேண்டியுள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
அழற்சி எதிர்ப்புப் பண்புகள்
நாம் குடிக்கும் காபியில் பல நன்மைகளும் உள்ளன. அதன்படி இதில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் இடம்பெற்றுள்ளன. இதை தொடர்ந்து குடித்து வந்தால், தூங்கி எழுந்ததும் கண்கள் வீங்குவது மற்றும் கண்ணங்கள் வீங்குவதை போன்றவற்றை குறைக்க உதவுகிறது. அதற்காக காபியை கொதிக்க வைத்த நீர் மிச்சமிருந்தால், பருத்தி துணியை அதில் நினைத்து, சுடச்சுட கண்களுக்கு கீழ் மற்றும் கண்ணங்கள் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இதன்மூலம் முகத்தில் காணப்படும் வீக்கங்கள் விரைவாக மறந்துப் போகும் மற்றும் சருமமும் ஆரோக்கியம் பெறும்.
ரத்த ஓட்டம் மேம்படுகிறது
அரை தேக்கரண்டி காபித் தூளுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து பேஸ்ட் போல செய்துவிடவும். அதை கண்களுக்கு கீழ் மற்றும் கண்ணங்களில் தடவவும். சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைத்திருந்துவிட்டு, குளிர்ந்த நீரில் கழுவிட வேண்டும். இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. கண்களுக்கு அடியில் ரத்தம் எதுவும் தேங்காமல் பாதுகாக்குகிறது. இதன்மூலம் கண்களுக்கு கீழ் ஏற்படும் கருவளையங்கள் மறையும் மற்றும் கண்ணங்களில் தென்படும் கருமையான நிறங்களும் மறைந்துப் போகும்.
கண்டவுடன் காதல் ஏன் ஏற்படுகிறது என்பது குறித்து உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்..?
முகப்பரு மறையும்
காபி பொடியை அரைத்து எக்ஸ்ஃபோலியேட்டராக பயன்படுத்துவதன் மூலம், முகத்தில் காணப்படும் முகப்பரு மற்றும் பருக்கள் காணாமல் போகும். இதில் நீங்கள் தண்ணீர் எதுவும் கலக்க தேவையில்லை. காபி தூளை எடுத்து முகத்தில் மென்மையாக தடவி கழுவுவதன் மூலம், பாக்டீரியாக்கள் அழிந்துவிடுகின்றன. இது இறந்த சருமத்தை நீக்கி முகப்பருவை குறைக்கும். மேலும், உங்கள் சருமம் பொலிவாக இருக்க உதவும்.
ஆலிவ் எண்ணெய்யுடன் காபி
காபிப் பொடி மற்றும் ஆலிவ் எண்ணெய்யில் ஆண்டி ஆக்சிடண்டுகள் உள்ளன. அவற்றை நன்றாக கலந்து சருமத்தில் தேய்த்தால், இளைமை கூடும். காபி பொடியை ஃபேஸ்பேக்காக செய்து போட்டால், சருமம் பிரகாசமாகவும் களங்கமற்றும் மாறுகிறது. அதேபோல உதடுகளில் புள்ளிகள் தோன்றினால், காபி பொடி, தேன் மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்து தேய்க்கவும். 10 நிமிடங்கள் அப்படியே மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் கழுவினால், உதட்டில் ஏற்படும் புள்ளிகள் மறையும்.