- Home
- உடல்நலம்
- அழகு குறிப்புகள்
- Monsoon Skincare : மழைக்காலத்துல இந்த அஞ்சுல 1 ஃபேஸ் பேக் போட்டா போதும்!! அழகு குறையவே குறையாது
Monsoon Skincare : மழைக்காலத்துல இந்த அஞ்சுல 1 ஃபேஸ் பேக் போட்டா போதும்!! அழகு குறையவே குறையாது
மழைக்காலத்தில் அழகு குறையாமல் முகம் பொலிவாக இருக்க சூப்பரான சில ஃபேஸ் பேக்குகளின் பட்டியல் இங்கே.

Face Packs For Rainy Season
மழைக்காலத்தில் குளிர்ச்சியான மற்றும் ஈரப்பதமான வானிலை காரணமாக பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். தலைமுடி தொடர்பான பிரச்சனைகள் முதல் சரும பிரச்சனைகள் வரை இதில் அடங்கும். ஆனால் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால் உடல் ஆரோக்கியத்தையும், சருமத்தின் அழகையும் பராமரிக்க முடியும். இதற்கு சில வீட்டு வைத்தியங்கள் கைகொடுக்கும்.
முக்கியமாக மழைக்காலத்தில் முகத்தின் அழகை பராமரிக்க கடைகளில் விற்பனையாகும் பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, வீட்டில் தயாரிக்கும் ஃபேஸ் பேக்குகள் போட்டால் முகம் நாள் முழுவத்தும் பொலிவாகவும், பளபளப்பாகவும் இருக்கும். இந்த பதிவில் மழைக்காலத்தில் போட வேண்டிய சில பயனுள்ள ஃபேஸ் பேக்குகள் பற்றி காணலாம்.
மஞ்சள் மற்றும் வேம்பு ஃபேஸ் பேக் :
மஞ்சள் இயற்கையாகவே முகத்திற்கு அழகை கொடுக்கும். வேப்பிலையில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் மழைக்காலத்தில் ஏற்படும் முகப்பருவை குறைக்க இது உதவும். இப்போது புதிய வேப்பிலைகளை நன்கு கழுவி அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து அதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுங்கள்.
முல்தானி மட்டி மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக் ;
இந்த ஃபேஸ் பேக் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் முல்தானி மட்டி சருமத்திலிருந்து அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சி துளைகளை திறக்க உதவும். ரோஸ் வாட்டரில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் இது சருமத்தை குளிர்விக்கும். இப்போது 2 ஸ்பூன் முல்தானி மெட்டி சிறிது அளவு அந்த பேஸ்ட்டே முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு முகத்தை கழுவினால் போதும்.
கடலை மாவு தயிர் மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக் :
எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு இந்த ஃபேஸ் பேக் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பெரும்பாலும் இந்த ஃபேஸ் பேக் மாலைகலங்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க 2 ஸ்பூன் கடலை மாவுடன், 1 ஸ்பூன் தயிர் மற்றும் 1 சிட்டிகை மஞ்சள் கலந்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து முகத்தை கழுவும்.
கற்றாழை ஜெல் மற்றும் வெள்ளரிக்காய் :
உணர் திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்களுக்கு இந்த ஃபேஸ் பேக் மிகவும் உதவியாக இருக்கும். கற்றாழை சருமத்தை நீரேற்றுமாக வைக்கும். வெள்ளரிக்காய் சருமத்தில் விரிசல் ஏற்படுவதை சரி செய்யும். இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க வெள்ளரிக்காய் சாறுடன் கற்றாழை ஜெல் கலந்து முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு முகத்தை கழுவுங்கள்.
சந்தனம் மற்றும் ரோஸ் வாட்டர் :
சந்தனத்தில் இருக்கும் கிருமி நாசினி பண்புகள் சருமத்தில் உள்ள தடிப்புகள் மற்றும் பருக்களை நீக்க முக்கிய பங்கு வகிக்கிறது. ரோஸ் வாட்டர் சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கும் மற்றும் சருமத்தை நீரேற்றமாக வைக்க உதவும். இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க சந்தன பொடியுடன் ரோஸ் வாட்டர் கலந்து அதை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பிறகு முகத்தை கழுவுங்கள்.