- Home
- உடல்நலம்
- அழகு குறிப்புகள்
- Dry Skin : வறண்ட சருமத்தை பராமரிக்குறது ஈஸிதான்! இந்த பொருட்களை யூஸ் பண்ணாம இருந்தாலே முகம் நல்லாருக்கும்
Dry Skin : வறண்ட சருமத்தை பராமரிக்குறது ஈஸிதான்! இந்த பொருட்களை யூஸ் பண்ணாம இருந்தாலே முகம் நல்லாருக்கும்
வறண்ட சருமம் உள்ளவர்கள் சில பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் சருமம் சேதமடையும். அவை என்னென்ன என்று இங்கு காணலாம்.

Skincare For Dry Skin
நம் ஒவ்வொருவருடைய சருமமும் வெவ்வேறு வகைப்படும். அதற்கேற்றார் போல நாம் சரும பராமரிப்பு பொருட்களை பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் சருமம் சேதமடையத் தொடங்கும். அதிலும் நம்முடைய முகம் ரொம்பவே முக்கியமானது. ஏனெனில், முகத்தின் தோல் மிகவும் மென்மையாக இருக்கும். இதனால் முகத்தில் தவறான பொருட்களை ஏதேனும் பயன்படுத்தினால் முகத்தில் தடிப்புகள், பருக்கள், ஒவ்வாமை, நிரமி போன்று பிரச்சனைகள் வர தொடங்கும். ஆகையால் முகத்தில் ஏதேனும் பயன்படுத்துவதற்கு முன் பயன்படுத்துவது நல்லது. இத்தகைய சூழ்நிலையில் உங்களுக்கு வறண்ட சருமம் இருந்தால் நீங்கள் சில பொருட்களை பயன்படுத்தக் கூடாது. அவை என்ன என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
புளிப்பான தயிர் :
வறண்ட சருமம் உங்களுக்கு இருந்தால் மறந்தும் கூட புளிப்பான தயிரை பயன்படுத்தி வேண்டாம். இது சருமத்திற்கு நன்மை பயக்காது. மேலும் இது சருமத்தில் இருக்கும் சிறிதளவு ஈரப்பதத்தை கூட உறிஞ்சி, சருமத்தை மேலும் வறட்சியாக்கி விடும்.
எலுமிச்சை :
சிலர் சரும பராமரிப்பில் எலுமிச்சையை முகத்திற்கு பயன்படுத்துவார்கள். ஆனால் வறண்ட சருமம் உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இது சருமத்தை மேலும் வறட்சியாக்கிவிடும். வேண்டுமானால் கற்றாழை ஜெல்லை பயன்படுத்தலாம்.
மைசூர் பருப்பு :
சில மைசூர் பரப்பில் ஃபேஸ் மாஸ்க், ஃபேஸ் பேக் பயன்படுத்துவார்கள். ஆனால் வறண்ட சருமம் உள்ளவர்கள் இந்த பருப்பை பயன்படுத்துவது நல்லதல்ல. எண்ணெய்ய் சருமம் உள்ளவர்களுக்கு தான் இது பெஸ்ட். வறண்ட சருமம் உள்ளவர்கள் இதை பயன்படுத்தினால் சருமத்தில் இருக்கும் கூடுதல் எண்ணெய்யை அகற்றி, சருமத்தில் வறட்சியை மேலும் அதிகரிக்கும்.
கடுமையான ஸ்கிராப் :
வறண்ட சருமம் உள்ளவர்கள் ஸ்கிரப் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. விரும்பினால் கூட கடுமையான அல்லது கரடு முரடான ஸ்கரப்பை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் இது சருமத்தை இன்னும் மோசமாகிவிடும். இதனால் சருமத்தில் வறட்சி, அரிப்பு, சிவத்தில் போன்ற பிரச்சனைகள் அதிகமாகும்.