சருமம் வறண்டு இருக்கிறதா..? இந்த அஞ்சுல ஏதாவது ஒன்னு யூஸ் பண்ணுங்க..மென்மையாக மாறும்!
உங்கள் தோல் அடிக்கடி வறண்டு போனால், இங்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த குறிப்புகளை மட்டும் பின்பற்றினால் போதும். அது உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்கும்.

dry skin home remedy
உங்கள் சருமம் ஈரப்பதத்தை எளிதில் இழக்கிறதா..? இதனால் நீங்கள் அடிக்கடி அரிப்பு தோல் வெடிப்பு தோல் இருக்கும் வரைந்து போதல் எரிச்சல் மற்றும் பலவற்றால் பாதிக்கப்படுகிறீர்களா..? சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க சில டிப்ஸ் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அவை நிச்சயம் உங்களுக்கு உதவும்.
dry skin home remedy
ரோஸ் வாட்டர்: ரோஸ் வாட்டர் சருமத்தை ஈரப்பதமாக்க பெரிதும் உதவுகிறது. ஏனெனில் இதில் இருக்கும் பி ஹெச் அளவை சமன் செய்கிறது. வறண்டு சருமத்திற்கு இது சிறந்த தேர்வாகும். உங்கள் சருமம் வறண்டு அரிப்புடன் இருந்தால் சிறிது நேரம் ரோஸ் வாட்டர் தடவினால், அரிப்பு ஏற்படாது. தருமமும் ஈரமாக இருக்கும்.
dry skin home remedy
தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெய் சருமத்தை ஈரமாக்கும் பண்பை கொண்டது. வறண்ட சரும உள்ளவர்களுக்கு இது நல்லது. ஏனெனில் இது சருமத்தை ஆழமாக ஊட்டமளிக்கிறது மற்றும் ஈரப்பதமாக்குகிறது. இதற்கு நீங்கள் குளிப்பதற்கு முன் அல்லது பின் இதை பயன்படுத்தலாம். இரவில் படுக்கும் முன் தேங்காய் எண்ணையை கால்களில் தடவி மசாஜ் செய்யவும்.
dry skin home remedy
அவகோடா: இந்த பழத்தில் கொழுப்பு ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் உள்ளன. இந்த பழம் சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது. இயற்கையான மாய்ஸரைஸராக வறண்ட சருமத்திற்கு இது ஒரு நல்ல தேர்வாகும். இது வயதான அறிகுறிகளை குறைக்க உதவுகிறது. இந்த பழத்தை உங்கள் முகத்திலும் உடலிலும் நேரடியாக பயன்படுத்தலாம்.
இதையும் படிங்க: Skin Care : மறந்தும் கூட உங்கள் முகத்தில் இவற்றை ஒருபோதும் அப்ளை பண்ணாதீங்க..!
dry skin home remedy
பப்பாளி: பப்பாளி சிறந்த ஈரப்பதம் ஓட்டும் நன்மைகளைக் கொண்டுள்ளது மற்றும் சருமத்தை பிரகாசமாக்குகிறது. மேலும் இது சருமத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் சருமத்தில் இருக்கும் சுருக்கங்களை குறைக்க பெரிதும் உதவுகிறது. எனவே, நீங்கள் பப்பாளியை உங்கள் முகத்திற்கு ஃபேஸ் பேக்காக பயன்படுத்தலாம்.
இதையும் படிங்க: Korean Glass Skin : அரிசி மாவை இப்படி யூஸ் பண்ணுங்க; உங்களுக்கும் கொரியன் கிளாஸ் ஸ்கின் கிடைக்கும்!!
dry skin home remedy
தேன்: தேன் ஒரு இயற்கை ஈரப்பதம் மற்றும் சருமத்தை ஆழமாக ஈரப்பதமாக்குகிறது. இது தவிர, இது அலர்ஜி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. இது எரிச்சல் மற்றும் சிவத்தல் மற்றும் வேறு ஏதேனும் தோல் அலர்ஜியை சரி செய்ய உதவுகிறது. மேலும், இது சருமத்தை திறம்பட்ட பிரகாசம் ஆகிறது. எனவே, இதை நீங்கள் சருமத்திற்கு நேரடியாக பயன்படுத்தலாம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D