சருமத்தில் அடிக்கடி எண்ணெய் வழிகிறதா..?? நீங்கள் தவிர்க்க வேண்டிய 5 உணவுகள்..!!
எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு முகப்பருக்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதுபோன்ற சருமம் கொண்டவர்கள் பருக்கள் ஏற்படாமல் தடுப்பதற்கான வழிமுறைகளை தெரிந்துகொள்ளலாம்.
சிலருக்கு வறண்ட சருமம் இருக்கும். சிலருக்கு எண்ணெய் பசை சருமம் இருக்கும். தென்னிந்தியாவை பொறுத்த வரை எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் தான் அதிகம். இதுபோன்ற சருமம் மாறிவரும் காலநிலைக்கு ஏற்ப தாக்குபிடிப்பது சற்று சிரமமான காரியம். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு முகப்பருக்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அவ்வப்போது தண்ணீரில் முகத்தை கழுவுவது, பால் பொருட்களை அளவுடன் சாப்பிடுவது, வெயிலில் அதிக நேரம் அலையாமல் இருப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதன்மூலம் பருக்கள் எதுவும் வராமல் இருக்கும். அந்த வகையில் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய சில உணவுகளை குறித்து பார்க்கலாம்.
கொழுப்பு
எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. அந்த பட்டியலில் பால் மற்றும் பால் பொருட்களும் அடங்கும். இவை சருமத்தை எண்ணெய் பசையாக மாற்றும். எனவே பால் மற்றும் பால் பொருட்களை கட்டுப்பாடுடன் சாப்பிடுங்கள்.
உப்பு
உப்பின் அதிகப்படியான பயன்பாடு எண்ணெய் சருமத்தை மோசமாக பாதிக்கும். எனவே, உப்பு அதிகம் உள்ள உணவுகளை (ஊறுகாய், வற்றல்) அதிகளவில் சாப்பிடுவது கூடாது. முடிந்தவரை உப்பை மிகவும் கம்மியாக சாப்பிடுங்கள். இதனால் எண்ணெய் பசை கொண்ட சருமப் பிரச்னை வராமல் தவிர்க்கப்படுவது மட்டுமின்றி, உடலுக்கு பல்வேறு நன்மைகளும் கிடைக்கின்றன.
coffee cup
காபி
காபியில் உள்ள காஃபின் சருமத்தை எரிச்சலூட்டும் மற்றும் முகப்பரு வெடிக்கும் அபாயத்தை அதிகரிக்கும். எனவே இவற்றின் பயன்பாட்டையும் குறைக்கலாம். காபி பதிலாக டீ குடிப்பது, பால் கலக்காமல் நாட்டுச் சக்கரை கலந்து வெறு காபியை குடிப்பது போன்றவை சிறந்த மாற்றுவழிகளாகும்.
Image: Getty Images
சக்கரை
பாஸ்தா, ஜங்க் ஃபுட் மற்றும் பழச்சாறுகளில் சர்க்கரை அதிகம் உள்ளது. இவை சருமத்தின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும். எனவே இவற்றை உணவில் இருந்து தவிர்ப்பது நல்லது. பேக்கரி உணவுகளிலும் சர்க்கரை அதிகம். எனவே எண்ணெய் பசை சருமத்திற்கு இந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.
பொரித்த உணவுகள்
பொரித்த உணவுகளை முடிந்தவரை தவிர்த்திடுங்கள். அதில் கொழுப்பு, உப்பு, இனிப்பு என எல்லாமே இருக்கும். அதேபோன்று, எண்ணெய் பசை கொண்டவர்களுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தால், அதை உடனடியாக கைவிடுவது மிகவும் நல்லது. இதனால் சருமத்தின் ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்பட்டு, உடல்நலனையும் பாதிக்கும்.