தொண்டை வலியை உடனடியாக போக்க உதவும் 5 உணவுகள்..!!
தொண்டை வலி இருக்கும்போது பலர் அதிகம் சாப்பிடுவதில்லை. குளிர்ந்த உணவுகள் அல்லது பழச்சாறுகள் தொண்டை வலிக்கு ஏற்றதல்ல மற்றும் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். தொண்டைப்புண் பிரச்சனையில் இருந்து உங்களுக்கு நிவாரணம் தரும் சில உணவு மற்றும் பானங்கள் பற்றி இங்கு பகிர்கிறேன்.
தொண்டை புண் ஒரு பருவகால பிரச்னையாகும். காலநிலை மாற்றம் மட்டுமின்றி ஒவ்வாமை உள்ளிட்ட பல பிரச்சனைகளாலும் தொண்டை வலி ஏற்படுகிறது. தொண்டை வலி இருந்தால், சாப்பிடுவது கடினம். தொண்டை வலி இருக்கும்போது பலர் அதிகம் சாப்பிடுவதையும் தவிர்க்கின்றனர். குளிர்ந்த உணவுகள் அல்லது பழச்சாறுகள் தொண்டை வலிக்கு ஏற்றதல்ல மற்றும் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். தொண்டைப்புண் பிரச்சனையில் இருந்து உங்களுக்கு நிவாரணம் தரும் சில உணவு மற்றும் பானங்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
வேகவைத்த முட்டை
வேகவைத்த முட்டையை தொண்டை வலி இருக்கும் போது தைரியமாக சாப்பிடலாம். முட்டையை எண்ணெயில் பொரித்தோ அல்லது எண்ணெயில் சமைத்தோ சாப்பிட்டால் தொண்டை பிரச்சனைகள் அதிகரிக்கும். ஆனால் வேகவைத்த முட்டைகளை சாப்பிடும் போது, எந்தவிதமான பிரச்னைகளும் இல்லாமல் எளிதாக சாப்பிடலாம்.
மசித்த உருளைக் கிழங்கு
தொண்டை வலி இருக்கும்போது மசித்த உருளைக்கிழங்கு அல்லது வேகவைத்த உருளைக்கிழங்கு சாப்பிடுவதும் நல்லது. அதற்கு உருளைக்கிழங்கை வேகவைத்து பிசைந்து கொள்ளவும் - தேவைப்பட்டால் சிறிது மசாலா சேர்க்கவும். ஆனால் எந்த வகையிலும் எண்ணெய் சேர்ப்பது கூடாது. அதன்மூலம் தொண்டை எரிச்சல் அதிகரிக்கும்.
நட்ஸ்
தொண்டை வலி இருக்கும் போது நட்ஸ் சாப்பிடலாம். அதிக எண்ணெய் மற்றும் நெய் சேர்க்காமல் தயாரிக்கப்பட்ட நட்ஸ் சாப்பிடுவது மிகவும். ஆனால் சக்கரை கலந்து சாப்பிடுவது, ஜூஸ் போட்டு அருந்துவது, உப்பு மற்றும் மஞ்சள் போட்டு வேகவைத்து சாப்பிடுவது போன்றவை தொண்டைப் புண்ணுக்கு வழிவகுக்கும்.
நன்றாக சாப்பிட வேண்டும்
தொண்டை புண் இருக்கும் போது சாப்பிடாமல் இருப்பது உங்கள் ஆரோக்கியத்தை மேலும் மோசமாக்கும். எனவே குறித்த நேரத்துக்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது முக்கியம். இதனால் சிரமம் ஏற்படுவது குறையும்.
உணவை சேமிக்க பிளாஸ்டிக் கொள்கலன்களைப் பயன்படுத்த வேண்டாம்; ஏன் தெரியுமா?
வெதுவெதுப்பான பால்
வெதுவெதுப்பான பால் குடிப்பதாலும் தொண்டை வலியில் இருந்து விடுபடலாம். ஆனால் குளிர்ந்த பால், ஷேக்ஸ் மற்றும் தயிர் போன்ற உணவுகளை தவிர்க்கவும். பால் அல்லது பால் பொருட்களுக்கு ஒவ்வாமை உள்ளவர்களும் பால் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
தொண்டை கரகரப்பு அல்லது சளி வந்தால், வெந்நீரைக் குடித்துவிட்டு பெரும்பாலானோர் அடிக்கடி குடிக்கும் பானமே டீ. முடிந்தவரை இஞ்சி அல்லது பிற மசாலாப் பொருட்களுடன் சூடான தேநீர் குடிக்கவும். இது தொண்டை வலிக்கு பெரும் நிவாரணம் அளிக்கும்.