- Home
- Gallery
- சினிமாவுக்கே டஃப் கொடுக்கும் இதயம் சீரியல்... தொடர்ந்து 3 மணிநேரம் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிப்பு- காரணம் என்ன?
சினிமாவுக்கே டஃப் கொடுக்கும் இதயம் சீரியல்... தொடர்ந்து 3 மணிநேரம் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிப்பு- காரணம் என்ன?
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் புகழ்பெற்ற சீரியல்களில் ஒன்றான இதயம் சீரியல் தொடர்ந்து இரண்டரை மணிநேரம் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்படு உள்ளது.

idhayam serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின் கதைக்களம் ஆதி, பாரதி கல்யாணத்தை நெருங்கி வருகிறது. ஒரு பக்கம் ஆதிக்கும் பாரதிக்கும் கல்யாண ஏற்பாடுகள் நடக்க ஸ்வேதா ஆதி தன்னுடைய கழுத்தில் தாலி கட்ட வேண்டும் என்று அதற்கான சூழ்ச்சி வேலைகளை தொடங்கி உள்ளார்.
idhayam serial Update
இன்னொரு பக்கம் சொத்துக்காக ஆதியை போட்டு தள்ள சித்தப்பா சதி வேலைகளை செய்ய தொடங்கியுள்ளார். இது மட்டுமின்றி மணி துரை தான் பாரதி கழுத்தில் தாலி கட்ட வேண்டும் என்று அதற்கான சதிகளை செய்ய தொடங்கியுள்ளார். இதையெல்லாம் மீறி ஆதி, பாரதி கல்யாணம் எப்படி நடக்க போகிறது? ஆதி சதிகளை தாண்டி பாரதியை எப்படி கரம் பிடிக்க போகிறான் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.
இதையும் படியுங்கள்... நடிகைகளுடன் நெருக்கம் காட்டிய GV பிரகாஷ்.. சண்டைபோட்ட சைந்தவி; விவாகரத்துக்கான காரணத்தை போட்டுடைத்த பயில்வான்
Zee Tamil idhayam serial
இந்த நிலையில் ஜீ பிரபலங்கள் பங்கேற்க ஆதி பாரதியின் திருமண வைபோகம் கோலாகலமாக நடைபெற உள்ளது. ஆம், வரும் மே 19-ம் தேதி மதியம் 1.30 மணி முதல் 4 மணி வரை ஆதி, பாரதியின் திருமண வைபோகம் எபிசோட் 4 மணி நேரம் ஒளிபரப்பாக இருப்பதாக ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
idhayam serial news
இதை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு நாளா இதுக்கு தான் வைட் பண்ணிட்டு இருந்தோம் என்று கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். ஆதி, பாரதி திருமணத்திற்கு பிறகு புதிய அத்தியாயத்தில் இதயம் சீரியல் கதை பயணிக்க தொடங்கும் என்பதால் இந்த சீரியலில் டிஆர்பி-யும் எகிறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... அப்பவே 1200 கோடி வசூல்.. பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டிய எம்.ஜி.ஆர். படம்.. எது தெரியுமா?