Pradeep: ரவீனா சொன்ன அந்த அரணாகயிறு மேட்டர் இது தான்! பிரதீப் எந்த தப்பும் செய்யல யுகேந்திரனின் ஆதங்க பேச்சு!
பிக்பாஸ் போட்டியாளரான பிரதீப் தன்னுடைய அரணாகயிறு பற்றி கமெண்ட் சொன்னதாக, ரவீனா கூறியது இதை தான் என, யுகேந்திரன் ஆதங்கத்தோடு பேட்டியில் கூறியுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி, கடந்த வாரம் துவங்கியது. இதில் கூல் சுரேஷ், ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், ஐஷு, மாயா, பூர்ணிமா, அனன்யா ராவ், யுகேந்திரன் வாசுதேவன், விஜய் வர்மா, விஷ்ணு, மணி சந்திரா, பவா செல்லத்துரை உள்ளிட்ட 18 போட்டியாளர்கள் உள்ளே வந்தனர்.
முதல் வாரத்தில் டபுள் எவிக்ஷன் இல்லாமலேயே, இருவர் வெளியேறினர். அனன்யா ராவ் குறைந்த வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றப்பட்ட நிலையில், பவா செல்லதுரை உடல்நல பிரச்சனை காரணமாக வெளியேறினார். இவரை தொடர்ந்து விஜய் வர்மா வெளியேறினார். பின்னர் அதிரடியாக டபுள் எவிக்ஷன் வைக்கப்பட்டு, அதில்... யூஹேந்திரன் மற்றும் வினுஷா ஆகியோர் வெளியேறினர்.
Breaking: ஜப்பான் - ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுத்த தமிழக அரசு!
BB Tamil 7
இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டாலும், அதிரடியாக 5 போட்டியாளர்களை ஒரே சமயத்தில் பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்தனர். வைல்ட் கார்டு போட்டியாளர்கள் 5 போரையும் உள்ளே வந்த வேகத்தில், ஸ்மால் பாஸ் வீட்டுக்குள் போட்டு வஞ்சித்தனர் பிக்பாஸ் வீட்டில் இருந்த பழைய போட்டியாளர்கள். ஒரு சிலர் புதிய போட்டியாளர்களிடம் நியாயமாக நடந்து கொண்டாலும் சிலர், அவமரியாதை செய்யும் விதத்தில் நடந்து கொண்டதையும் பார்க்க முடிந்தது.
Red Card Pradeep
இதை தொடர்ந்து, கடந்த வாரம் கூல் சுரேஷை பிரதீப் தவறாக பேசி விட்டார் என போட்டியாளர்கள் சிலர் உரிமை குரல் உயர்த்த... இந்த விஷயம் பெண்கள் பாதுகாப்பு என்கிற ட்ராக்காக மாறியது. ஒரு பக்க நியாயத்தை மட்டுமே கேட்ட கமல், பிரதீப் என்ன செய்தார் என்பதை கூட கேட்காமல்... ஒரு வித அரசியல் உணர்வை வெளிப்படுத்துவது போல் பேசி அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பினார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
BB Tamil 7
பிரதீபுக்கு ஆதரவாக பலர் ஒன்று கூடி குரல் கொடுத்து வருவது ஒருபக்கம் இருக்க... மற்றொரு புறமோ , பிக்பாஸ் வீட்டிலேயே அவர் மீது வைக்கப்பட்ட குற்றம் அபத்தமானது என அர்ச்சனா, விசித்ரா, தினேஷ் ஆகியோர் கூறி வருகிறார்கள். இதற்காக மாயாவின் புல்லி கேங் அர்ச்சனாவை தினமும் அழ வைத்ததையும் பார்க்க முடிந்தது.
BB Tamil 7
ஏற்கனவே பூர்ணிமா வைத்த குற்றச்சாட்டுக்கு, குறும்படம் போட்டு நெட்டிசன்கள் அவரை விளாசி வரும் நிலையில்... ரவீனா தன்னுடைய அரணாகயிறு பற்றி பேசியதாக கூறி இருந்தார். இதற்கான விளக்கம் அவர் கொடுக்க வந்தபோது, அதனை கமல் காதுகொடுத்து கேட்கவில்லை.
Arthika:கார்த்திகை தீபம் சீரியல் நடிகை ஹர்த்திகாவுக்கு நடந்து முடிந்தது திருமணம்! வெட்டிங் போட்டோஸ்!
இந்த சம்பவம் நடந்த போது பக்கத்தில் இருந்தே யுகேந்திரன் பேட்டி ஒன்றில், உண்மையை கூறி உள்ளார். அதாவது ரவீனா டாஸ்க் செய்யும் போது, அவரின் அரணாகயிறு வெளியில் தெரிந்தது. அதனால் பிரதீப் அவரை அழைத்து, எல்லோரும் பார்ப்பாங்க கொஞ்சம் அரணாகயரை மறை என்று சொன்னார். அவர் நல்ல எண்ணத்தில் தான் சொன்னார். இது ஒரு விஷயமே இல்லை என்பதை நாம் அப்போதே சொல்லிவிட்டேன் என கூறியுள்ளார். இதன் மூலம் புல்லி கேங் பிளான் போட்டு தான், பிரதீப்பை வெளியேற்றிவிட்டது என, செம்ம சூடான கமெண்ட்ஸை போட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.