இனி என் மகளை விட்டு பிரிய மாட்டேன்! 'ரத்தம்' பட செய்தியாளர் சந்திப்புக்கு இரண்டாவது மகளுடன் வந்த விஜய் ஆண்டனி!
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ரத்தம் திரைப்படம் அடுத்த மாதம் 6-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
தமிழில் வித்தியாசமான கதைக்களத்தில் உருவான, 'தமிழ் படம்' மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சி.எஸ்.அமுதன். இவரின் இயக்கத்தில் தற்போது திரில்லர் மற்றும் ஆக்ஷன் ஜர்னரில் உருவாகியுள்ள திரைப்படம் தான் 'ரத்தம்'.
பிச்சைக்காரன் 2 படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ள இந்த படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இதில் நடிகை மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் போன்றவை, ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, படம் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்க செய்தது.
'ரத்தம்' திரைப்படம், அக்டோபர் 6ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் ஆண்டனி தன்னுடைய மகளின் இழப்பை வெளிப்படுத்தி கொள்ளாமல் கலந்து கொண்டது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
அதே போல் இனி மகளை விட்டு பிரிந்திருக்க மாட்டேன் என்பதை சொல்லாமல் சொல்லும் விதமாக, தன்னுடைய இரண்டாவது மகள் லாராவுடன் கலந்து கொண்டார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.