Ajith: அஜித்துடன் விஜய் டிவி சீரியல் ஹீரோ! பிறந்தநாள் பார்ட்டியில் கிடைத்த தல தரிசனம்.. வைரலாகும் போட்டோஸ்!
தல அஜித்தை பிரபல விஜய் டிவி சீரியல் நடிகர், தீபக் சந்தித்த போது எடுத்து கொண்ட புகைப்படங்களை, தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட... அவை வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Actor Ajith
கோலிவுட் திரையுலகில் தனக்கென அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட மிக சில நடிகர்களில் ஒருவர் அஜித். எப்போதும் தன்னை பிஸியாகவே வைத்து கொள்ளும் இவர், சென்னையில் இருக்கும் நேரத்தில் அதிக பட்சம் தன்னுடைய மனைவி ஷாலினி, மகன் - மகள் மற்றும் குடும்பத்தினருடன் நேரம் கழிப்பதையே வழக்கமாக வைத்துள்ளார்.
Deepak Meet Actor Ajith:
அதே போல் எப்போதாவது தனக்கு மிகவும் நெருக்கமானவர்களின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார். பிரபலங்களின் திருமணங்களில் கலந்து கொண்டால் கூட்டம் கூடி, அவர்களின் அமைதியான நிகழ்ச்சி அளப்பறையாக மாறிவிட கூடாது என்பதால், சில நிகழ்ச்சிகளை தவிர்த்தாலும் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில் பரிசுகளை அனுப்பி விடுவார்.
Ajith Participate birthday party:
இந்நிலையில், அஜித் தனக்கு மிகவும் நெருக்கமான ஒருவரின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில், பிரபல சீரியல் நடிகரும், தொகுப்பாளருமான தீபக் தன்னுடைய மனைவியுடன் கலந்து கொண்டுள்ளார்.
Ajith Rare moments:
எதிர்பாராத விதமாக அஜித்தை பார்த்த சந்தோஷத்தில், மனைவியுடன் சேர்ந்து சில போட்டோஸ் எடுத்து கொண்டுள்ளார் தீபக். இந்த புகைப்படங்களை தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள தீபக், உணர்வு பூர்வமாக அஜித்தை புகழ்ந்து தள்ளி பதிவிட, புகைப்படங்கள் படு வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
Vijay tv Serial actor deepak
இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில், "இன்று தல தரிசனம் கிடைத்தது. இது ஒரு ப்ளூ மூன் டே எனக்கு.. அவர் அனைவருக்கு மத்தியிலும் மிகவும் அமைதியாக இருந்தார். உண்மையான ஜென்டில்மேன். இந்த தருணத்தை எங்களுக்கு பரிசளித்த அஜித் நம்பியார் அவர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார். தீபக் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'தமிழும் சரஸ்வதியும்' சீரியலில் நடித்து வருகிறார். சில திரைப்படங்கள் இவர் நடித்த நிலையில், அந்த படத்தில் வெற்றிபெறாததால், தொடர்ந்து சீரியல்களில் கவனம் செலுத்தி வருகிறார்.