- Home
- Gallery
- இரண்டாவது குழந்தை பிறந்தாச்சு.. புகைப்படத்துடன் அறிவித்த சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக்! குவியும் வாழ்த்து!
இரண்டாவது குழந்தை பிறந்தாச்சு.. புகைப்படத்துடன் அறிவித்த சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக்! குவியும் வாழ்த்து!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பொன்னி' மற்றும் 'மோதலும் காதலும்' சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த, நடிகை ஸ்ரீதேவி அசோக் தனக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ள தகவலை புகைப்படத்துடன் அறிவித்துள்ளார்.

sridevi ashok
சில நடிகைகள் சீரியலில் அறிமுகமாவதற்கு முன்பே திரைப்படங்களில் அறிமுகமாகி, சரியான பட வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் சீரியல் பக்கம் சாய்ந்து விடுகின்றனர். அப்படி திரைப்படங்களில் நடித்து அடுத்தடுத்து வாய்ப்பு கிடைக்காததால் தொலைக்காட்சி தொடரில் நடிக்க துவங்கியவர் தான் ஸ்ரீதேவி அசோக்.
sridevi ashok
இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு, நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 'புதுக்கோட்டை சரவணன்' திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். இதைத்தொடர்ந்து 'கிழக்கு கடற்கரை சாலை' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். ஆனால் இந்த இரண்டு படங்களினுமே இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்க்க தவறிவிட்டது. எனவே அதிரடியாக சன் டிவி சீரியல் பக்கம் தாவினார்.
sridevi ashok
அதன்படி இவர் நடித்த 'செல்லமடி நீ எனக்கு', 'தங்கம்', 'இளவரசி', 'கல்யாண பரிசு', 'நிலா' போன்ற சீரியல்கள் நல்ல வரவேற்பை பெற்றதோடு, அடுத்தடுத்த வாய்ப்புகளையும் இவருக்கு பெற்று தந்தது. பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'மை நேம் இஸ் மங்கம்மா', 'பூவே பூச்சூடவா', 'செம்பருத்தி' போன்ற சீரியல்களிலும் நடித்து பிரபலமானார்.
sridevi ashok
பின்னர் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி', 'அரண்மனைக்கிளி', 'பொம்முக்குட்டி அம்மாவுக்கு' போன்ற தொடர்களில் நடித்தார். தற்போது 'மோதலும் காதலும்', 'பொன்னி' ஆகிய தொடர்களில் நடித்து வருகிறார். கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் தன்னுடைய சீரியலில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தார் ஸ்ரீதேவி அசோக்.
sridevi ashok
இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அசோக் சிண்டெலா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த தம்பதிக்கு சித்தாரா என்கிற ஐந்து வயது குழந்தை ஒன்று உள்ளது. மேலும் கடந்த ஆண்டு இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் தகவலை ஸ்ரீதேவி அசோக் அறிவித்தார்.
இந்நிலையில் இவருடைய ஏழாவது மாதத்தில் இவருக்கு வளைகாப்பு செய்து அழகு பார்த்தார் இவருடைய கணவர். இதில் பல சீரியல் பிரபலங்கள் கலந்து கொண்டு இவரை வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து தற்போது ஸ்ரீதேவி அசோக்கிற்கு இன்று இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளதாக அவரை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் க்யூட் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார். மேலும் குழந்தையும் - தாயும் நலமுடன் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் பலர் தொடர்ந்து நடிகை ஸ்ரீதேவி அசோகிக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். குழந்தை பிறந்த பின்னர் ஸ்ரீதேவி நடிப்பாரா அல்லது சீரியலுக்கு பிரேக் விடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.