- Home
- Gallery
- Ajith Salary: 'குட் பேட் அக்லி' படத்தில் நடிக்க அஜித் பெரும் சம்பளம் இத்தனை கோடியா? கேட்டாலே பக்குனு ஆகுதே!
Ajith Salary: 'குட் பேட் அக்லி' படத்தில் நடிக்க அஜித் பெரும் சம்பளம் இத்தனை கோடியா? கேட்டாலே பக்குனு ஆகுதே!
தல அஜித், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் 'குட் பேட் அக்லி' படத்தில் நடிப்பதற்காக பெற உள்ள சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Good Bad Ugly
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியான திரைப்படம் 'துணிவு'. இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் தற்போது 'விடாமுயற்சி' என்கிற படத்தில் அஜித் நடித்து முடித்துள்ளார்.
thala ajith
இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியதுமே, அஜித் அதிரடியாக தன்னுடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி 'துணிவு' படத்தில் நடித்த ஆதிக் ரவிச்சந்திரன் கூறிய கதை மிகவும் பிடித்ததால், அவருடைய இயக்கத்திலேயே அஜித் தற்போது நடித்து வருகிறார்.
'குட் பேட் அக்லி' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் அறிவிப்பு, கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன் வெளியானது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதை போல் கடந்த வாரம் 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று வெளியாகி, படு வைரலானது. இதில் அஜித் பச்சை நிறத்தில் ஜிகு ஜிகு என ஜொலிக்கும் உடையில் கை நிறைய டாட்டூஸ் குத்தி கொண்டு, வாட்ச், மோதிரங்கள், போன்றவற்றை அணிந்து பக்கா கேங் ஸ்டார் போல் இருந்தார்.
அவர் முன்பு ஏழு ரக துப்பாக்கிகள் மற்றும் அதன் குண்டுகள் வைக்கப்பட்டிருந்த நிலையில், கையில் போட்டுக்கொண்டு மற்றவர்களை தாக்கும் ஆயுதம் ஆகியவை இருந்தன. எனவே இது ஒரு தரமான கேங்ஸ்டர் திரைப்படமாக இருக்கும் என ரசிகர்கள் இப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Star Movie OTT: கவின் நடிப்பில் வெளியான 'ஸ்டார்' படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
இந்த போஸ்டர் வெளியானதில் இருந்தே, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படும் நிலையில்... அண்மையில் இந்த திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமை குறித்த தகவலும் வெளியானது. அதன்படி நெட்பிலிக்ஸ் நிறுவனம் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.95 கோடி ரூபாய் வரை கொடுத்து இப்படத்தை டிஜிட்டல் உரிமையை கைப்பற்றி உள்ளதாக கூறப்பட்டது.
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்திற்கு அஜித் பெற உள்ள சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்திற்காக அஜித் குமார் ரூ.163 கோடி வரை சம்பளம் பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. படத்துக்கு படம் இப்படி தன்னுடைய சம்பளத்தை அஜித் பல கோடி ஏற்றிக் கொண்டே போவது, தயாரிப்பாளர்களை பக் என ஆக்கி உள்ளது.