- Home
- Gallery
- Mr & Mrs Chinnathirai: மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரை சீசன் 5 நிகழ்சியில் கலந்து கொள்ளும் 11 பிரபல ஜோடிகள்!
Mr & Mrs Chinnathirai: மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரை சீசன் 5 நிகழ்சியில் கலந்து கொள்ளும் 11 பிரபல ஜோடிகள்!
விஜய் டிவி-யில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள, மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் 5-ஆவது சீசனில், கலந்து கொள்ள உள்ள 11 பிரபலங்கள் பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

விஜய் டிவி தொலைக்காட்சியில் கடந்த வாரம் நிறைவடைந்த 'மோதலும் காதலும்' சீரியலில் நடித்திருந்த நடிகர் சமீர், தன்னுடைய மனைவி அஜீபாவுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்.
அதே போல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முத்தழகு சீரியலில் நடித்து வரும் நடிகை வைஷாலி தன்னுடைய கணவர் தேவ்வுடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.
amit bargav
இவர்களை தொடர்ந்து, 'கல்யாணம் முதல் காதல் வரை' சீரியல் உள்ளிட்ட ஏராளமான சின்னத்திரை தொடர்கள், மற்றும் திரைப்படங்களில் நடித்து வரும் அமித் பார்கவ் தன்னுடைய மனைவி ரஞ்சனியுடன் பல வருடங்களுக்கு பின்னர் மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் சீசன் 5-வில் கலந்து கொள்ள உள்ளார்.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான தாமரை செல்வி, தற்போது 'சின்ன மருமகள்' சீரியலில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து தன்னுடைய கணவர் பார்த்தசாரதியுடன் சேர்ந்து மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
kottachi
அதே போல் ஏராளமான திரைப்படங்களில் நடித்த காமெடி நடிகர் கொட்டாச்சி, தன்னுடைய மனைவியும் டப்பிங் ஆர்டிஸ்டுமான அஞ்சலியுடன் முதல் முறையாக ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்.
Nanjil Vijayan marriage
விஜய் டிவி தொலைக்காட்சியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான நாஞ்சில் விஜயன், சமீபத்தில் கூட குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். இதை தொடர்ந்து தற்போது தன்னுடைய மனைவி மரியாவுடன் சேர்ந்து மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்.
Breaking: 37 வயதே ஆகும்... திரைப்பட நடிகர் சித்திக்கின் மகன் ரஷீன் அதிர்ச்சி மரணம்!
indraja
இவர்கள் அனைவருக்கு டஃப் கொடுக்கும் விதத்தில், திருமணம் ஆகி 3 மாதமே ஆகும், நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா மற்றும் கார்த்திக் தம்பதி முதல் முறையாக ஒன்றாக இணைந்து விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ள உள்ளனர்.
தமிழும் சரஸ்வதியும், கண்ணே கலைமானே போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகர் நவீன், முதல் முறையாக தன்னுடைய மனைவி சௌமியாவுடன் சேர்ந்து, மிஸ்டர் அண்ட் மிசைஸ் சின்னத்திரை சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்.
யூடியூப் ஊடகங்களில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ள, ஆஷிக்... மனைவி சோனுவுடன் இணைந்து சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
அதே போல் சன் டிவி மற்றும் விஜய் டிவியில் ஏராளமான சீரியல்களில் அம்மா, மாமியார் என முதிர்ச்சியான வேடங்களை தேர்வு செய்து அசத்தி வரும் மீராகிருஷ்ணன் கணவர் சிவகுமாருடன் சேர்ந்து இந்த நிகஸ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர். இவர்களுடன் லின்ஸி மற்றும் சுரேந்தர் என்கிற ஜோடியும் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.