- Home
- Gallery
- கையில் ட்ராகன்.. ரக்கட் லுக்கில் நாக்கை கடித்து கொண்டு தெறிக்கவிடும் அஜித்தின் 'குட் பேட் அக்லி' செகண்ட் லுக்!
கையில் ட்ராகன்.. ரக்கட் லுக்கில் நாக்கை கடித்து கொண்டு தெறிக்கவிடும் அஜித்தின் 'குட் பேட் அக்லி' செகண்ட் லுக்!
அஜித் கார் ரேஸில் மீண்டும் ஆர்வம் காட்டும் வீடியோ... கடந்த சில தினங்களாக சமூக வலைதளத்தில் பட்டையை கிளப்பி வரும் நிலையில், தற்போது 'குட் பேட் அக்லி' படத்தின் இரண்டாம் லுக் வெளியாகி ரசிகர்களை உற்சாக படுத்தியுள்ளது.

Good Bad Ugly
தல அஜித் நடிப்பில் தற்போது இரண்டு படங்கள் தயாராகி வருகின்றன. அதில் ஒன்று இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்து வரும் 'விடாமுயற்சி'. இதில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை திரிஷா நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடித்துள்ளார். மேலும் ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிக்பாஸ் ஆரவ், நடிகை ரெஜினா கசெண்ட்ரா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்து நடித்துள்ளது. அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு இசையமைக்கிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்துவிட்டது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு மட்டும் எஞ்சி உள்ளது.
இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு தயாராகி உள்ள நிலையில், இந்த படத்தை முடித்த கையேடு அஜித் த்ரிஷா இல்லனா நயன்தாரா, பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தில் முழுமையாக கவனம் செலுத்த உள்ளார். ஏற்கனவே இபபடத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. அஜித் விடாமுயற்சி படப்பிடிப்புக்காக இப்படத்தில் முழுமையாக கவனம் செலுத்தாமல் உள்ளார்.
Matka Movie: 15 கோடி பணத்தை கொட்டி வைஸாக் நகரை உருவாக்கிய 'மட்கா' படக்குழு!
Good Bad Ugly
மேலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம், திருப்பதி விசிட், மற்றும் மீண்டும் கார் ரேஸில் கவனம் என எப்போதும் தன்னை பிஸியாகவே அஜித் வைத்து கொண்டுள்ளதையும் பார்க்க முடிகிறது.
அஜித்தின் குட் பேட் அக்லி, வரும் பொங்கலை குறிவைத்துள்ள நிலையில்... இப்படத்தின் அப்டேட் குறித்த தகவலையும் அவ்வப்போது படக்குழு வெளியிட்டு வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் தற்போது அஜித்தின் படு மாஸான 'குட் பேட் அக்லி' படத்தின் இரண்டாவது லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.