- Home
- Gallery
- என்னிடம் இப்படி தான் நடந்து கொள்வார்? பழம்பெரும் நடிகர் கிருஷ்ணா குறித்து நடிகை வாணிஸ்ரீ கூறிய ஷாக் தகவல்.!
என்னிடம் இப்படி தான் நடந்து கொள்வார்? பழம்பெரும் நடிகர் கிருஷ்ணா குறித்து நடிகை வாணிஸ்ரீ கூறிய ஷாக் தகவல்.!
பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ, மறைந்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா குறித்து பகிர்ந்து கொண்டுள்ள தகவல் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில், 1960 மற்றும் 70களில் முன்னணி நடிகையாக இருந்தவர் வாணிஸ்ரீ. ஒரு சில இந்தி படங்களிலும் நடித்து புகழ் பெற்றவர். தெலுங்கில் பீஷ்மா என்றும் படத்தில் அறிமுகமாய் அடுத்தடுத்து பல தெலுங்கு முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.
தமிழில் 1966-ஆம் ஆண்டு வெளியான, நம்ப வீட்டு லட்சுமி எனும் படத்தில் அறிமுகமான வாணிஸ்ரீ, பின்னர் காதல் படுத்தும் பாடு, தங்க தம்பி, காதலித்தால் போதுமா, கன்னி பெண், குழந்தை உள்ளம் போன்ற பல படங்களில் நடித்தார். குறிப்பாக தமிழில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன், வாணிஸ்ரீ நடித்த வசந்த மாளிகை திரைப்படம் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.
தமிழை விட தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்திய வாணிஸ்ரீ, என்டிஆர், கிருஷ்ணம் ராஜு, ஷோபன் பாபு, என அனைத்து ஹீரோக்களுடனும் நடித்தவர். அதே போல் பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகர்ஜுனா போன்ற அடுத்த தலைமுறை ஹீரோக்களுக்கு அம்மா, அத்தை போன்ற வேடங்களிலும் நடித்துள்ளார்.
இவர் மறைந்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா பற்றி அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறி உள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தன்னுடைய நடிப்பை பார்த்து, தன்னுடன் நடிக்கும் அனைத்து நடிகர்களுடன் பாராட்டி உள்ளனர், ஆனால் கிருஷ்ணா மட்டும் தன்னை பாராட்டியதே இல்லை. அதே போல் அவருக்கு என்னுடன் என்ன பிரச்சனை என தெரியவில்லை... அவர் என்னிடம் மிகவும் குறைவாகவே பேசுவார் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ஸ்டார் ஹீரோயினாக நடித்த பிறகு அத்தை, அம்மா போன்ற வேடத்தில் நடிக்க எனக்கு எந்த சிரமமும் ஏற்படவில்லை . பாய்காரு ரீமேக் படம் முதலில் கிருஷ்ணாவிடம் தான் சென்றது. கிருஷ்ணாவின் அம்மாவாக வாணிஸ்ரீ நடித்தால் மட்டுமே தயாரிப்போம் என்று தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர். எனவே கிருஷ்ணா என்னை அழைத்தார். இந்தப் படத்தை நீங்கள்தான் செய்ய வேண்டும் என்றார். அந்தக் கதையில் கிருஷ்ணாவுக்கு மிகவும் நம்பிக்கை இருந்தது.
இது ரீமேக் படம். மேலும் இந்த படத்தில் நடிக்க நான் சம்பாதிக்கவில்லை. தமிழில் அந்தப் படத்தைப் பார்த்தால், க்ளைமாக்ஸில் தந்தை மகனுக்கு விஷம் கொடுக்கும் காட்சிகள் உள்ளன. எனவே இப்படத்தில் நான் நடிக்க முடியாது என அவரிடம் கூறினேன். வாணிஸ்ரீ ஒப்புக்கொள்ளாததால், கிருஷ்ணாவின் கையிலிருந்து படம் வெங்கடேஷுக்கு சென்றது. அம்மா வேடத்தில் ஜெயசித்ரா நடித்தார். சில படங்கள் தனக்கு பிடிக்காவிட்டாலும் செய்தேன் என கூறியுள்ள வாணிஸ்ரீ. பாம்பே பிரியுடு, விந்தையான கதைகள் போன்ற படங்களில் கதைகளில் நடிக்க தனக்கு விருப்பம் இல்லை என்பதையும் இந்த பேட்டியில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.