மனைவியின் வளைகாப்பை கோலாகலமாக நடத்திய புகழ்... படையெடுத்து வந்து வாழ்த்திய விஜய் டிவி பிரபலங்கள்
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பேமஸ் ஆன புகழ் தன் மனைவியின் வளைகாப்பை கோலாகலமாக நடத்தி இருக்கிறார்.
pugazh
விஜய் டிவி காமெடி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் புகழ். இவரை மிகவும் பாப்புலர் ஆகியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை நிராகரித்துவிட்டு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற புகழுக்கு அந்நிகழ்ச்சி மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
Benzi pugazh
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்கிய புகழுக்கு படிப்படியாக சினிமா வாய்ப்புகளும் கிடைத்தன. அந்த வகையில் சந்தானத்தின் சபாபதி படம் மூலம் அறிமுகமான புகழ், பின்னர் சூர்யா உடன் எதற்கும் துணிந்தவன், சசிகுமார் உடன் அயோத்தி, விஜய் சேதுபதி உடன் டிஎஸ்பி போன்ற படங்களில் நடித்தார்.
இதையும் படியுங்கள்... பேரழகி உடன் நான்... கீர்த்தி பாண்டியனை கிண்டலடித்தவர்களுக்கு அசோக் செல்வன் கொடுத்த செருப்படி ரிப்ளை
pugazh wife baby shower
இதுவரை நகைச்சுவை வேடங்களில் மட்டும் நடித்து வந்த புகழ், ஜூ கீப்பர் என்கிற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாகி இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். ஜூ கீப்பர் படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
sivaangi with benzi pugazh
புகழுக்கு கடந்தாண்டு திருமணம் ஆனது. அவர் தனது நீண்ட நாள் காதலியான பென்ஸி என்பவரை குடும்பத்தினர் சம்மதத்துடன் கடந்தாண்டு கரம்பிடித்தார். இந்த நிலையில், கடந்த மாதம் தன் மனைவி கர்ப்பமாக இருக்கும் தகவலை ஒரு அழகிய போட்டோஷூட் மூலம் அறிவித்து இருந்தார் புகழ்.
pugazh wife baby shower photos
இந்நிலையில், இன்று புகழ் தன் மனைவி பென்ஸிக்கு வளைகாப்பு நடத்தி இருக்கிறார். கோலாகலமாக நடைபெற்ற இந்த வளைகாப்பு நிகழ்வில் குக் வித் கோமாளி பிரபலம் ஷிவாங்கி, விஜய் டிவி காமெடி நடிகர் நாஞ்சில் விஜயன் உள்பட ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர். அப்போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... பேமிலி பர்ஸ்ட்... மத்ததெல்லாம் நெக்ஸ்ட்! சந்திரபாபு நாயுடு உடனான சந்திப்பை கேன்சல் பண்ணிய ரஜினி - காரணம் என்ன?