பேமிலி பர்ஸ்ட்... மத்ததெல்லாம் நெக்ஸ்ட்! சந்திரபாபு நாயுடு உடனான சந்திப்பை கேன்சல் பண்ணிய ரஜினி - காரணம் என்ன?

சிறையில் உள்ள ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை பார்க்க போகாதது ஏன் என்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

Due to family function Rajinikanth cancelled meeting with TDP chief Chandrababu Naidu gan

கோவை சூலூர் செந்தோட்டம் பகுதியில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலில் நடிகர் ரஜினிகாந்தின் 2வது மகளான சௌந்தர்யா மற்றும் விசாகனின் தம்பதியினரின் மகனுக்கு பெயர் சூட்டுதல் மற்றும் காதணி விழா நடைபெறுகிறது. விசாகனின் குலதெய்வமான சூலூர் மீனாட்சி அம்மன் கோவிலில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதில் ரஜினிகாந்த் குடும்பத்தினர் மற்றும் விசாகனின் குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்றுள்ளனர். இதற்காக விமானம் மூலம் நடிகர் ரஜினிகாந்த் கோவை வந்தடைந்தார். அவருக்கு ரஜினி ரசிகர் மன்றத்தினர் மற்றும் அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். பின்னர் அங்கிருந்த செய்தியாளர்கள் ரஜினியிடம் சிறையில் உள்ள ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை பார்க்க போகவில்லையா என கேள்வி எழுப்பினர்.

இதையும் படியுங்கள்... பிரதர்னு சொன்ன ப்ரியா... விடாமல் பாலோ பண்ணிய அட்லீ - ஜவான் இயக்குனரின் காதல் சக்சஸ் ஆனது எப்படி?

Due to family function Rajinikanth cancelled meeting with TDP chief Chandrababu Naidu gan

இதற்கு, பதிலளித்த ரஜினி, அங்கு போவதாக இருந்தது, ஆனால் பேமிலி பங்க்‌ஷன் இருந்ததன் காரணமாக போக முடியவில்லை என கூறினார். தன் பேரனின் காதணி விழா காரணமாக சந்திரபாபுவை சிறையில் சந்திக்கும் முடிவை கைவிட்டுள்ளார் ரஜினி. ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, தனது ஆட்சி காலத்தில் திறன் மேம்பாட்டு துறையில் ஊழல் செய்ததன் காரணமாக கடந்த செப்டம்பர் 9-ந் தேதி கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் அவரை ராஜமுந்திரி சிறையில் அடைத்துள்ளனர். இதனிடையே அவரை சந்திக்க அனுமதி கோரி சிறை அதிகாரிகளிடம் மனு ஒன்றை கொடுத்திருந்தார் ரஜினிகாந்த், ஆனால் தற்போது பேரனின் காதணி விழாவுக்காக கோவை சென்றுவிட்டதால் சந்திரபாபு நாயுடுவை சந்திக்கும் முடிவை கைவிட்டுள்ளார் ரஜினி.

இதையும் படியுங்கள்... சிலுக்கை காட்டி செம்ம வசூல் வேட்டை நடத்தும் மார்க் ஆண்டனி - ஆத்தாடி இரண்டே நாளில் இத்தனை கோடி கலெக்‌ஷனா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios