2ம் நாளில் டிராப்... 3ம் நாளில் டாப்! பாக்ஸ் ஆபிஸில் பதுங்கி பாயும் லியோ... மூன்றே நாளில் இத்தனை கோடி வசூலா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தின் மூன்றாம் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெளியாகி உள்ளது.
Leo
மாநகரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, வரிசையாக கைதி, மாஸ்டர், விக்ரம் என நான்கு மாஸ் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர்கள் லிஸ்ட்டில் இணைந்திருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் அண்மையில் ரிலீஸ் ஆகி உள்ள திரைப்படம் லியோ. நடிகர் விஜய்யுடன் அவர் கூட்டணி அமைக்கும் இரண்டாவது படம் இதுவாகும். இதற்கு முன் இவர்கள் கூட்டணியில் மாஸ்டர் என்கிற திரைப்படம் ரிலீஸ் ஆனது.
Leo movie collection
லியோ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த அக்டோபர் 19-ந் தேதி திரைக்கு வந்தது. இப்படம் வெளியான முதல் நாளே கலவையான விமர்சனங்களை பெற்றது. படத்தின் முதல் பாதி சூப்பராகவும், இரண்டாம் பாதி சுமாராகவும் இருப்பதாக விமர்சகர்கள் விமர்சித்து வந்தனர். இருப்பினும் பேமிலி ஆடியன்ஸுக்கு லியோ படம் மிகவும் பிடித்துப்போனதால், இப்படம் முதல் நாளில் இருந்தே பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Leo Box Office
லியோ திரைப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.148 கோடி வசூலித்திருந்தது. இதனை தயாரிப்பாளரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது நாள் விடுமுறை தினம் இல்லாததால், வசூலில் சற்று பின் தங்கிய லியோ அன்றைய தினம் ரூ.70 கோடி மட்டுமே வசூலித்து இருந்தது. ஆனால் மூன்றாவது நாளான நேற்று விடுமுறை தினம் என்பதால் லியோ படம் பாக்ஸ் ஆபிஸில் மீண்டும் பிக் அப் ஆகி வசூல் வேட்டை நடத்தி உள்ளது.
Leo Box Office collection day 3
அதன்படி இப்படம் நேற்று மட்டும் உலகளவில் ரூ.90 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் மூன்றே நாளில் உலகளவில் ரூ.300 கோடி வசூலைக் கடந்து மாஸ் காட்டி உள்ளது லியோ. விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வாரிசு படம் ரூ.310 கோடி வசூலித்ததே விஜய்யின் கெரியரில் அதிக வசூல் ஈட்டிய படமாக இருந்து வந்த நிலையில், லியோ திரைப்படம் மூன்றே நாளில் அந்த வசூலை நெருங்கி உள்ளது. நாளை வாரிசு படத்தின் லைஃப் டைம் வசூலை லியோ முந்திவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... Kamalhaasan Watch Leo: லோக்கியின் 'லியோ' மேக்கிங்கை பார்த்து மெர்சலான உலக நாயகன்! வைரலாகும் புகைப்படம்!