ரூ.1500 கூட இல்லைங்க.. குறைந்த விலையில் விற்பனையாகும் சிறந்த கீபேட் ஃபோன்கள் இவைதான்..
நீங்கள் கீபேட் ஃபோனை வாங்க போகிறீர்கள் என்றால், இந்த செய்தி உங்களுக்கானது ஆகும். இங்கே சில சிறந்த ஆப்ஷன்களை கொண்ட நல்ல தரமான சிறந்த கீபேட் ஃபோன்கள் பற்றி பார்க்கலாம்.

Best Keypad Phones Under 1500
நோக்கியா ஆல்-நியூ 105 ஃபீச்சர் போனில் ஒற்றை சிம் வசதியுடன் வருகிறது. இந்த கீபேட் போனில் பில்ட் இன் யுபிஐ பேமெண்ட் வசதியும் உள்ளது. இந்த மொபைலில் 500 எஸ்எம்எஸ் மற்றும் 2000 தொடர்புகள் வரை சேமிக்கலாம். இதனுடன், நீங்கள் வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ மற்றும் நீண்ட கால பேட்டரியைப் பெறுவீர்கள். இதன் விலை ரூ.1199. இதன் மூலம் வெறும் ரூ.109 மாதாந்திர தவணையில் உங்களது சொந்தமாக்கிக் கொள்ளலாம்.
itel SG600
ஐடெல் SG600 மொபைல் 2.8 இன்ச் டிஸ்ப்ளே கொண்டது. இந்த போனின் பேட்டரி திறன் 1900 mAH ஆகும். இந்த போனில் UPI கட்டண விருப்பமும் உள்ளது. இதனுடன், தொலைபேசியில் ஃபிளாஷ் கொண்ட 1.3MP கேமரா உள்ளது. இதன் விலை ரூ.1499 மற்றும் இந்த போனை மாதம் ரூ.136 செலுத்தி வாங்கலாம்.
Jio Bharat B1 4G
ஜியோ பாரத் பி1 4ஜி யுபிஐ அம்சத்தோடு வருகிறது. மேலும் இது JioCinema மற்றும் JioSaavn ஆகியவற்றை பொழுதுபோக்குக்காக ஆதரிக்கிறது. இந்த போனில் 2.4 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது. தொலைபேசியில் 2000mAH பேட்டரி மற்றும் 23 இந்திய மொழிகளுக்கான ஆதரவு உள்ளது. இதன் விலை ரூபாய் 1,299 மற்றும் மாதத் தவணையில் 118 ரூபாய்க்கும் வாங்கலாம்.
ஆபிஸ் போக ஸ்கூட்டரை தேடுறீங்களா.. இதோ 120 கிமீ மைலேஜ் தரும் ஏதரின் சிறந்த ஸ்கூட்டர்..