தனுஷ், ரஜினி, சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக பொங்கல் ரேஸில் இணைந்த விஜய் சேதுபதியின் பான் இந்தியா படம்
பொங்கலுக்கு தனுஷ், ரஜினி மற்றும் சிவகார்த்திகேயன் படங்களுக்கு போட்டியாக விஜய் சேதுபதியின் படமும் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
pongal release movies
பண்டிகை தினங்களில் ரிலீசாகும் படங்களுக்கு தனி மவுசு உண்டு. அந்த வகையில் அண்மையில் முடிந்த தீபாவளி பண்டிகைக்கு கார்த்தி நடித்த ஜப்பான் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின. இதில் ஜப்பான் படம் முதல் நாளே மோசமான விமர்சனங்களை பெற்று தோல்வியடைந்ததால், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் தான் சோலோவாக இந்த தீபாவளி ரேஸில் வெற்றி பெற்றுள்ளது.
Ayalaan
தீபாவளிக்கு அடுத்தபடியாக தமிழ் நாட்டில் பெரிதும் கொண்டாடப்படும் பண்டிகை என்றால் அது பொங்கல் பண்டிகை தான். அந்த பண்டிகைக்கு ஏராளமான திரைப்படங்கள் களமிறங்க காத்திருக்கின்றன. முதலாவதாக பொங்கல் ரேஸில் இணைந்த திரைப்படம் என்றால் அது சிவகார்த்திகேயனின் அயலான் தான். அதைத்தொடர்ந்து சுந்தர் சி இயக்கி நடித்துள்ள அரண்மனை படத்தின் நான்காம் பாகம் பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Lal Salaam, Captain Miller
இதற்கு அடுத்தபடியாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் உருவாகி உள்ள லால் சலாம் திரைப்படம் பொங்கல் ரேஸில் இணைந்தது. இப்படத்தில் ரஜினிகாந்தும் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். இதையடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என கடந்த வாரம் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
merry christmas
இப்படி ஏற்கனவே நான்கு திரைப்படங்கள் பொங்கல் ரேஸில் காத்திருக்கும் நிலையில், தற்போது புதுவரவாக விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் இணைந்துள்ளது. டிசம்பர் மாதம் ரிலீசாக இருந்த இப்படம் தற்போது பொங்கலுக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. பான் இந்தியா படமாக உருவாகி உள்ள இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் நடித்துள்ளார். இப்படம் ஜனவரி 12-ந் தேதி திரைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... குட்டி TTF ஆக மாறிய தனுஷ் மகன்.. லைசன்ஸ் இல்லாமல் பைக் ஓட்டி வசமாக சிக்கிய யாத்ரா - போட்டோவால் வெடித்த சர்ச்சை