தலைவர்-தளபதி சந்திப்பு… ஸ்டாலினிடம் என்ன கேட்டார் விஜய்?
சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற கல்பாத்தி அகோரம் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நடிகர் விஜய் கைகுலுக்கி வெகு நேரம் பேசினார்.
vijay
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். நடிப்பு ஒருப்பக்கம் இருந்தாலும் மறுபக்கம் அரசியலிலும் அவ்வப்போது தலையை காட்டுகிறார் விஜய். சில காலமாகவே விஜய் தன்னுடைய பட பாடல் வெளியீட்டு விழாவின்போது குட்டி கதை சொல்வது, அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களை பேசுவது என்று ரசிகர்களை பரபரப்பாக்கி வருகிறார்.
vijay
வேலாயுதம் படத்தில் நான் ஆளுங்கட்சி என்ற விஜயின் வசனம் அவரது ஆதரவு அதிமுகவுக்கு என்பதை வெளிப்படுத்தியது. பின்னர் தலைவா படம் உருவாகும் போது அதிமுக படம் ரிலீஸ் ஆவதற்கு பெரும் பிரச்சனை செய்தது. இதனால் படக்குழு பெரும் சிக்கல்களுக்கு நடுவில் அந்த படத்தை ரிலீஸ் செய்தது.
vijay
இதை அடுத்து அதிமுகவில் இருந்து விலகி தனது தந்தையின் வழிகாட்டுதலின் பேரில் திமுகவுக்கு தனது ஆதரவை அளித்தார் விஜய். தேர்தலின்போது அவர் சைக்கிளில் வந்து வாக்களித்ததும் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.
vijay
தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு எதிராக விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட்டு தனது பலத்தை நிரூபித்தது. பல்வேறு இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். மேலும் சில இடங்களில் 3, 4 ஆம் இடங்களை பிடித்தது.
vijay
இந்த நிலையில் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட் படம் இம்மாதம் 13 ஆம் தேதி நேரடியாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய்யின் 65வது படமான பீஸ்ட் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால், படத்தின் புரமோஷன் மற்றும் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
vijay
இதற்கிடையே சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற கல்பாத்தி அகோரம் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நடிகர் விஜய் கைகுலுக்கி வெகு நேரம் பேசினார்.
vijay
இந்த சந்திப்பில் ஸ்டாலினிடம் விஜய் அரசியல் பேசினார் என்று கூறப்படுகிறது. மறுபுறம் பட ரிலீஸ் குறித்தும் அதிகாலை காட்சி குறித்தும் பேசியதாக கூறப்படுகிறது.