விக்கி இயக்கத்தில் பிரதீப்.. படத்தில் இணைந்த இரு லெஜெண்ட்ஸ்.. மியூசிக் அவரே தான் - லேட்டஸ்ட் அப்டேட் இதோ!
Pradeep Ranganathan : வெறும் இரண்டு திரைப்படங்களை தான் இயக்கியுள்ளார் என்றபோதும், தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராகவும், நடிகராகவும் மாறி இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன் என்று கூறினால் அது மிகையல்ல.
Director Pradeep Ranganathan
இந்நிலையில் அவர் முதல் முறையாக வேறொரு இயக்குனரின் படத்தில் நடிகராக நடிக்க உள்ளார். பிரபல இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தனது ஐடி தொழிலில் இருந்து விலகி கடந்த 2019 ஆண்டு வெளியான ஜெயம் ரவியின் "கோமாளி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராகவும், நடிகராகவும் எழுத்தாளராகவும் களம் இறங்கினார்.
SIIMA
அந்த திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அவருக்கு சைமா விருதுகள் கிடைத்தது, 2019 ஆம் ஆண்டின் மிகச்சிறந்த அறிமுக இயக்குனர் என்கின்ற விருதை சைமா நிறுவனம் அவருக்கு வழங்கியது. அதேபோல கடந்த 2022 ஆம் ஆண்டு அவருடைய இயக்கத்தில் வெளியான "லவ் டுடே" திரைப்படத்திற்காக அவருக்கு சிறந்த அறிமுக நடிகர் என்கின்ற விருதையும் சைமா வழங்கியது.
Vignesh Shivan
இந்நிலையில் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்த பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ள அடுத்த திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடிக்க இருக்கிறார் பிரதிப் ரங்கநாதன் என்கின்ற தகவல்கள் ஏற்கனவே வெளியானது. இந்நிலையில் அடுத்த முக்கிய தகவலாக இந்த திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
SJ Suryha
அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் நடிப்பு அரக்கன் எஸ்.ஜே சூர்யா மற்றும் இயக்குனர் மிஷ்கின் ஆகிய ஜாம்பவான்களும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பாக ராஜ்கமல் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்து வெளியிடும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது இப்படத்தை லலித் குமாரின் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.