ஒற்றை சிரிப்பில் ஆளை மயக்கும் அதுல்யா ரவி.. சிவப்பு சேலையில் வந்து சொன்ன தீபாவளி வாழ்த்து - போட்டோஸ் இதோ!
Athulya Ravi Deepavali Wish : இன்று தீபாவளி திருநாளை முன்னிட்டு திரைத்துறையை சேர்ந்த நடிகர் நடிகைகள் மற்றும் பிரபலங்கள் பலரும் தங்களுடைய தீபாவளி வாழ்த்துக்களை தங்களது ரசிகர்களுக்கும், தமிழர்களுக்கும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அத்துல்யா ரவி அவர்களும் தனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Athulya
கோவையில் பிறந்து பொறியியல் படிப்பை முடித்து நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தினால் குறும்படங்களில் நடிக்க தொடங்கி அதன் பிறகு இப்பொழுது சினிமாவில் நடித்து வரும் நடிகை தான் அதுல்யா ரவி. கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான "காதல் கண் கட்டுதே" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
ஹாப்பி தீபாவளி மக்களே.. கொஞ்சும் கவர்ச்சியோடு - க்ரீனிஷ் ஆடையில் வாழ்த்து சொன்ன யாஷிகா ஆனந்த்!
Actress Athulya
இதுவரை தமிழ் மொழியை தவிர பிற மொழிகளில் நடிக்காத அதுல்யா ரவி, இந்த 2023 ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான "மீட்டர்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் அந்த திரையுலகில் தனது கால் தடத்தை பதித்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான "நாடோடிகள்" படத்தின் இரண்டாம் பாகம் இவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்று தந்தது.
Actress Athulya Ravi
தொடர்ச்சியாக தமிழ் திரை உலகில் கடந்த ஆறு ஆண்டுகளாக பயணித்து வரும் அதுல்யா ரவி, தற்பொழுது "டீசல்" என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் ஹரிஷ் கல்யாண் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடிக்க, பிரபல நடிகர்கள் வினை, சாய்குமார் மற்றும் விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.