நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிட்டீங்களே ஏகே... ஷங்கரின் 4 பிரம்மாண்ட படங்களை ரிஜெக்ட் செய்த அஜித் - காரணம் என்ன?
விஜய், ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியுள்ள ஷங்கர் நடிகர் அஜித்துக்காக தயார் செய்த 4 பிரம்மாண்ட படங்கள் கைகூடாமல் போனது ஏன் என்பது பற்றி பார்க்கலாம்.
Shankar, Ajith
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். ஜென்டில்மேன் தொடங்கி தற்போது இவர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் வரை இவர் இயக்கிய அனைத்துமே பிரம்மாண்ட படங்கள் தான். இவர் இயக்கத்தில் விஜய், ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துவிட்டாலும், நடிகர் அஜித் மட்டும் ஒரு படத்தில் கூட ஷங்கருடன் பணியாற்றியதில்லை. ஷங்கருக்கு மிகப்பிடித்த நடிகரே அஜித் தானாம். இருந்தும் அவர்கள் இருவரும் இணையாதது ஏன் என்பது பற்றி பார்க்கலாம்.
Ajith, Director Shankar
இயக்குனர் ஷங்கர் அஜித்துக்காக 4 பிரம்மாண்ட கதைகளை தயார் செய்தாராம். ஆனால் அந்த நான்கு படங்களிலும் பல்வேறு காரணங்களால் அஜித்தால் நடிக்க முடியாமல் போனதாம். இவர்கள் இருவரும் முதன்முதலில் இணைய இருந்த திரைப்படம் ஜீன்ஸ். இப்படத்தில் அஜித்தை இரட்டை வேடத்தில் நடிக்க வைக்க ஆசைப்பட்டுள்ளார் ஷங்கர். ஆனால் அந்த சமயத்தில் வேறு படத்தில் பிசியாக இருந்ததால் இப்படத்திற்கு கால்ஷீட் கொடுக்க முடியாமல் போனதாம். இதனால் இந்த வாய்ப்பு பிரசாந்துக்கு சென்றுள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Director shankar favourite actor ajith
இதற்கு அடுத்தபடியாக முதல்வன் படத்திலும் அஜித்தை நடிக்க வைக்க ஆசைப்பட்டுள்ளார் ஷங்கர். அரசியல் கதையம்சம் கொண்ட கதை என்பதால் அஜித் இதில் நடிக்க ஆர்வம் காட்டவில்லையாம். பின்னர் விஜய்யிடம் இந்த கதையை சொல்ல, அவரும் நடிக்க மறுத்துவிட்டதால் இறுதியாக அர்ஜுனை நடிக்க வைத்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளார் ஷங்கர். அர்ஜுனின் கெரியரில் இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
Ajith misses Shankar movies
அதேபோல் ரஜினியை வைத்து ஷங்கர் அடுத்தடுத்து இயக்கிய சிவாஜி மற்றும் எந்திரன் ஆகிய படங்களிலும் முதல் சாய்ஸாக அஜித் தான் இருந்துள்ளார். இரண்டுமே பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் என்பதால், ஒருவேளை படம் தோல்வி அடைந்துவிட்டால் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுவிடும் என்பதை கருத்தில் கொண்டு அஜித் நடிக்க மறுத்துவிட்டாராம். அந்த இரண்டு படங்களும் ரஜினியின் வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக மாறிப்போனது. இப்படி 4 படங்கள் மிஸ் ஆனாலும் அஜித்துடன் எப்படியாவது படம் பண்ண வேண்டும் என்கிற ஆவலோடு காத்திருக்கிறார் ஷங்கர். இந்த கூட்டணி விரைவில் கைகூடினால் அருமையாக இருக்கும் என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படியுங்கள்... அரண்மனை போன்ற வீடு முதல் ஐடி கம்பெனி வரை... அமெரிக்காவில் ராஜ வாழ்க்கை வாழும் நெப்போலியனின் சொத்து மதிப்பு