MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • அரண்மனை போன்ற வீடு முதல் ஐடி கம்பெனி வரை... அமெரிக்காவில் அம்பானியாக வாழும் நெப்போலியனின் சொத்து மதிப்பு

அரண்மனை போன்ற வீடு முதல் ஐடி கம்பெனி வரை... அமெரிக்காவில் அம்பானியாக வாழும் நெப்போலியனின் சொத்து மதிப்பு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், செல்வாக்குமிக்க அரசியல்வாதியாகவும் வலம் வந்த நெப்போலியனின் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.

3 Min read
Ganesh A
Published : Oct 06 2023, 08:28 PM IST| Updated : Oct 07 2023, 09:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

பாரதிராஜாவால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர் தான் நெப்போலியன். இவரின் இயற்பெயர் குமரேசன். இயக்குனர் பாரதிராஜா, தான் அறிமுகப்படுத்தும் நடிகர்களுக்கு அவர் தான் பெயர் வைப்பார். அப்படி நெப்போலியனை பார்த்ததும் மாவீரன் நெப்போலியன் போல இருந்ததால் அவருக்கு நெப்போலியன் என பெயர் வைத்துவிட்டாராம் பாரதிராஜா. அந்த பெயர் தான் தற்போது அவருக்கு ஒரு அடையாளமாக மாற்றிவிட்டது.

29

பாரதிராஜாவின் புது நெல்லு புது நாத்து படம் மூலம் வில்லனாக அறிமுகமான நெப்போலியன் தொடர்ந்து ரஜினியின் எஜமான் உள்பட சில படங்களில் நெகடிவ் ரோல்களில் நடித்து வந்தார். பின்னர் ஹீரோவாக நடித்த நெப்போலியனுக்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் தான் சீவலப்பேரி பாண்டி. இதன்பின்னர் அவர் நடிப்பில் வெளிவந்த எட்டுப்பட்டி ராசா திரைப்படம் நெப்போலியனை பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆக்கியது.

39

இப்படி சினிமா குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி கண்ட நெப்போலியனை அரசியலுக்கு அழைத்து சென்றார் கலைஞர். தற்போது திமுக அமைச்சராக இருக்கும் கே.என்.நேருவின் உறவினரான நெப்போலியனுக்கு கடந்த 2001-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு கொடுத்து வில்லிவாக்கம் தொகுதியில் எம்.எல்.ஏ வாக நிற்க வைத்தார் கலைஞர். அந்த தேர்தலில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆன நெப்போலியன் அந்த தொகுதி மக்களுக்கு சிறப்பாக பணியாற்றினார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

49

பின்னர் பெரம்பூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.பி ஆகவும் பதவி வகித்த நெப்போலியன் திடீரென சினிமா மற்றும் அரசியலை விட்டு விலகி அமெரிக்காவில் செட்டில் ஆனார். இதற்கு காரணம் அவரது மகன் தனுஷ் தான். நெப்போலியன், ஜெயசுதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு தனுஷ், குணால் என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் தனுஷுக்கு தசை அளர்ச்சி நோய் பாதிப்பு இருந்தது. அதற்கு அமெரிக்காவில் தான் சிகிச்சை அளிக்க முடியும் என்பதற்காக அங்கேயே சென்று செட்டில் ஆகிவிட்டார்.

59

அமெரிக்காவில் ஐடி கம்பெனி ஒன்றையும் நடத்தி வருகிறார் நெப்போலியன். சினிமாவில் பணியாற்றியபோதே சினிமா தொழிலாளர்களுடன் நெருங்கிப் பழகும் நெப்போலியன் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்வாராம். குறிப்பாக சினிமாவில் லைட் மேனாக இருப்பவர்களின் பிள்ளைகள், மேக்கப் ஆர்டிஸ்ட் ஆக இருப்பவர்களின் பிள்ளைகள் ஆகியோருக்கு தன் ஐடி கம்பெனியில் உடனடி வேலை வழங்கி நல்ல சம்பளமும் வழங்கி வருகிறாராம் நெப்போலியன். இந்த ஐடி கம்பெனி மூலம் கோடி கோடியாய் வருமானமும் ஈட்டி வருகிறார்.

69

அதுமட்டுமின்றி அமெரிக்காவில் 3 ஆயிரம் ஏக்கருக்கு விவசாய பண்ணை ஒன்றையும் வைத்திருக்கிறார் நெப்போலியன். அதில் பல்வேறு காய்கறிகள் அறுவடை செய்து அதன் மூலமும் நன்கு லாபம் பார்த்து வருகிறார் நெப்போலியன். அங்கேயே மாட்டுப்பண்ணையும் உள்ளது. நெப்போலியனின் இந்த விவசாய பண்ணையில் பணியாற்றி வருபவர்கள் பெரும்பாலானோர் தமிழர்கள் தானாம்.

79

நெப்போலியன் அவர் மகன்கள் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டு அவரின் அமெரிக்கா வீடு தான். அரண்மனை போல இருக்கும் அந்த வீட்டை தன்னுடைய மகனுக்காக பார்த்து பார்த்து செதுக்கி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அவரது மகன் தனுஷால் நடக்க முடியாது என்பதற்காக வீட்டில் அவர் எந்த பகுதிக்கு தடையின்றி சென்றுவர பிரத்யேகமாக லிப்ட்டுகளை ஏற்பாடு செய்து கட்டி உள்ளார்.

89

இளைய மகன் குணால் கூடைப்பந்து விளையாடுவதில் ஆர்வம் கொண்டவர் என்பதால் அவருக்காக வீட்டுக்குள்ளேயே ஒரு கூடைப்பந்து மைதானமும் உள்ளது. இதுதவிர குடும்பத்துடன் சேர்ந்து படம் பார்ப்பதற்காக வீட்டுக்குள்ளேயே தியேட்டரும் உள்ளது. குடிப்பழக்கமே இல்லாத நெப்போலியன் தன் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்காக ஒரு அறை முழுக்க ஒயின் பாட்டில்களை வாங்கி அடுக்கி வைத்திருக்கிறார்.

99

நெப்போலியனின் வீட்டில் மொத்தம் 4 சொகுசு கார்கள் உள்ளன. இரு மகன்களில் ஒருவருக்கு டெஸ்லா காரும், மற்றொருவருக்கு பென்ஸ் காரும் வாங்கிக் கொடுத்துள்ள நெப்போலியன் தன் பயன்பாட்டிற்காக டொயோட்டா கார் ஒன்றை வைத்துள்ளார். இதுதவிர குடும்பத்துடன் சென்றுவர லிப்ட் வசதியுடன் கூடிய சொகுசு வேன் ஒன்றையும் சொந்தமாக வைத்திருக்கிறார் நெப்போலியன். இப்படி அமெரிக்காவின் ராஜ வாழ்க்கை வாழும் நடிகர் நெப்போலியனின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.200 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... ரெக்கார்ட் மேக்கர் ஆன தளபதி... ஜெயிலர் பட டிரைலரின் ஒட்டுமொத்த சாதனையை ஒரே நாளில் அடிச்சுதூக்கிய லியோ!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved