ரெக்கார்ட் மேக்கர் ஆன தளபதி... ஜெயிலர் பட டிரைலரின் ஒட்டுமொத்த சாதனையை ஒரே நாளில் அடிச்சுதூக்கிய லியோ!
ஜெயிலர் பட டிரைலரின் ஒட்டுமொத்த வியூஸ்களையும் நடிகர் விஜய்யின் லியோ பட டிரைலர் ஒரே நாளில் பெற்று புதிய சாதனை படைத்து உள்ளது.
Leo vs Jailer
விஜய் - அஜித் ரசிகர்கள் தான் சமூக வலைதளங்களில் அடிக்கடி மோதிக்கொள்வார்கள். ஆனால் சமீப காலமாக ரஜினி - விஜய் ரசிகர்கள் இடையேயான மோதல் தான் சூடுபிடித்து உள்ளது. விஜய் தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என்கிற விவாதம் கிளம்பியதில் இருந்தே இருதரப்பு ரசிகர்களும் சரமாரியாக ஒருவரை ஒருவர் விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது தொடர்கதை ஆகி வருகிறது. ஜெயிலர் பட ஆடியோ லாஞ்சில் ரஜினி தான் ரெக்கார்ட் மேக்கர் என்று கலாநிதி மாறன் சொன்னதும் விவாதப் பொருளாக மாறியது.
Leo Poster
விஜய்யை சீண்டும் விதமாக பேசியிருந்த கலாநிதி மாறனுக்கு தற்போது லியோ படத்தின் சாதனைகள் மூலம் பதிலடி கொடுத்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள். லியோ படத்தின் டிரைலர் நேற்று வெளியான நிலையில், அந்த டிரைலர் யூடியூப்பில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. அதன்படி வெளியான 17 மணிநேரத்திலேயே 30 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ள அந்த டிரைலர் ஜெயிலர் பட சாதனையை முறியடித்து உள்ளது.
vijay rajinikanth
ஜெயிலர் டிரைலர் வெளியாகி 2 மாதங்கள் ஆகும் நிலையில், அது யூடியூப்பில் வெறும் 30 மில்லியன் பார்வைகளை மட்டுமே பெற்றுள்ளது. ஆனால் லியோ டிரைலர் வெளியான 17 மணிநேரத்திலேயே 30 மில்லியன் பார்வைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் நடிகர் விஜய் தான் ஒரு ரெக்கார்ட் மேக்கர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளதாக கூறி தளபதி ரசிகர்கள் மார்தட்டி வருகின்றனர்.
Leo beats Jailer record
அதேபோல் அடுத்ததாக ஜெயிலர் படத்தின் வசூல் சாதனையை லியோ நிச்சயம் முறியடிக்கும் எனவும் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். வெளிநாடுகளில் ஏற்கனவே லியோ படத்தின் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல் தமிழ்நாட்டிலும் வருகிற அக்டோபர் 15-ந் தேதி லியோ பட முன்பதிவு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயிலர் பட டிரைலர் சாதனையை முறியடித்ததை போல் அப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளையும் லியோ முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... வனிதா மகள்கிட்டையே சவுண்டு விட்டா சும்மா விடுவாங்களா... விசித்ராவுக்கு செம்ம டோஸ் கொடுத்த ஜோவிகா - வீடியோ இதோ