அடித்து தூக்கும் வெங்காயம் விலை.. தக்காளி, இஞ்சி விலையும் சரசரவென உயர்வு.! இன்றைய காய்கறி நிலவரம் இதோ..!
காய்கறிகளின் வரத்தை பொறுத்து தினமும் விற்பனை விலையானது மாற்றி அமைக்கப்படுகிறது. அந்த வகையில் தக்காளி மற்றும் இஞ்சியின் வரத்து குறைந்துள்ளதன் காரணமாக விலை உயர்ந்துள்ளது.
ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தை. இங்கு 1000க்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2000கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. தினமும் காய் கறிகள் வரத்தை பொறுத்து விற்பனை நிலைகள் நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கோவக்காய் ஒரு கிலோ 27 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பெரிய கத்திரிக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கொத்தவரை ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த வகையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 56 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடும் வீழ்ச்சியை சந்தித்து இருந்த தக்காளி விலையானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஒரு கிலோ தக்காளி தற்போது 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இஞ்சின் விலையானது கடந்த சில வாரங்களாக உச்சத்தில் இருந்து தற்போது படிப்படியாக குறைந்து ஒரு கிலோ இஞ்சி 110 ரூபாய்க்கு விற்பனையாகிறது.