வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி திருமண பத்திரிகையே இவ்வளவு கிராண்டா இருக்கே? எப்போது திருமணம் தெரியுமா?
சிரஞ்சீவியின் தம்பி மகனும் நடிகருமான வருண் தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திரிபாதியின் திருமண பத்திரிக்கை உள்ளிட்ட தகவல்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி வருகிறது.
நடிகர் வருண் தேஜும், லாவண்யாவும் முதன் முதலில் இத்தாலியில் நடந்த 'மிஸ்டர் சித்ரா' படத்தில் இணைந்து நடித்த போது சந்தித்து கொண்டனர். அந்த படத்தில் நடித்து முடிப்பதற்கு முன்பாகவே இருவருக்கு இடையேயும் காதல் தீ பற்றி கொள்ள, அவ்வப்போது ரகசிய டேட்டிங் செய்வதையும் வழக்கமாக வைத்திருந்தனர்.
இவர்கள் இருவரின் காதல் விஷயம் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் கசிந்த போது கூட, தொடர்ந்து மௌனம் காத்து வந்த இந்த ஜோடி, பின்னர் ஒருவழியாக தங்கள் காதலை ஊரறிய கூறியது மட்டும் இன்றி, பெற்றோர் சம்மதத்துடன் இவர்கள் இருவரும் எளிமையான முறையில் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது.
இந்நிலையில் இந்த ஜோடிக்கு நவம்பர் 1 ஆம் தேதி, இத்தாலியில் திருமணம் நடைபெற உள்ளது. அதாவது படப்பிடிப்பில் சந்தித்த போது, இவருவரும் இத்தாலியின் தான் காதலிக்க துவங்கினர் எனவே செண்டிமெண்டாக இவர்களின் திருமணமும் அங்கு நடக்க உள்ளது.
இத்தாலியில் நடக்கும் திருமணத்தில், வருண் தேஜ் மற்றும் லாவண்யா குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும் இருவீட்டு குடும்ப நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளார். எனவே அவர்கள் இன்னும் சில நாட்களில் அங்கு செல்ல உள்ளதாகவும், இவர்களின் ஹல்தி, மெஹந்தி நிகழ்ச்சியும் இத்தாலியில் தான் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.
திருமணம் முடிந்த பின்னர், நவம்பர் 5ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள என் கன்வென்ஷன் சென்டரில் மிக பிரமாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதனுடன், வரவேற்பு தொடர்பான அழைப்பிதழ்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு இந்த நட்சத்திர ஜோடியை வாழ்த்துவார்கள் என தெரிகிறது.
பத்திரிகையின் முன் பக்கத்தில், வருண் மற்றும் லாவண்யாவின் பெயர்களின் V மற்றும் L எழுத்துக்களுடன் லோகோ வடிவமைக்கப்பட்டுள்ளது. உள்ளே வருண் தேஜின் பாட்டி அஞ்சனாதேவி, தாத்தா கொனிடேலா வெங்கடராவ் ஆகியோரின் ஆசிகள் அச்சிடப்பட்டுள்ளன. அதன் பிறகு சிரஞ்சீவி, பவன் கல்யாண் மற்றும் ராம்சரண் ஆகியோரின் பெயர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டன.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
விருந்தினர்களுக்கு தேவையான கார் பாஸ்களும் வரவேற்பு அழைப்பிதழில் சேர்க்கப்பட்டுள்ளன. வருண் தேஜ் மற்றும் லாவண்யாவின் திருமணம் மற்றும் வரவேற்பு ஆடைகளை இறுதி செய்ய பாலிவுட்டை சேர்ந்த நட்சத்திர வடிவமைப்பாளர் மணீஷ் மல்ஹோத்ரா டிசைன் செய்துள்ளதாக கூறப்படுகிறது.