Leo Box Office: 'லியோ' இன்னும் 500 கோடியை தொடவே இல்லை! வசூலில் பங்கமாக அடிவாங்கியதை அறிவித்த தயாரிப்பாளர்!
தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள 'லியோ' திரைப்படம், இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளது செவென் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம்.
தளபதி விஜய் நடிப்பில், அக்டோபர் 19 -ஆம் தேதி உலகம் முழுவதும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியான லியோ திரைப்படம், ஒரு தரப்பினர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும், மற்றொரு தரப்பினர்.. இப்படத்திற்கு நெகடிவ் விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள்.
அதே சமயம் தற்போது வரை வெற்றிகரமாக திரையரங்கில் ஓடி கொண்டிருக்கும் லியோ திரைப்படம், 6 நாட்களில் சுமார் 500 கோடியை கடந்து விட்டதாகவும், தமிழகத்தில் இதுவரை 200 கோடி வசூலை எட்டியதாக கூறப்பட்ட லியோ திரைப்படம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வருவதாக செய்திகள் வெளியானது. வெளிநாடுகளிலும் இந்த படத்திற்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்து வருகிறது.
அதே சமயம், திரைப்பட உரிமையாளர்கள் 'லியோ' படம் லாபம் இல்லை என கூறியது, ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. இதற்கு காரணம், லியோ தயாரிப்பாளர் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு போட்ட நிபந்தனை தான். முதல் வாரத்தில் லியோ படத்திற்கு கிடைக்கும் வசூலில் 50 சதவீதத்திற்கு மேல், தயாரிப்பு நிறுவனத்திற்கு என கூறப்பட்டதாக தெரிகிறது. இந்த பிரச்சனை காரணமாக படம் ரிலீஸ் ஆவதில் கூட மிகவும் தாமதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஒருவழியாக அனைத்து பிரச்சனைகளும் முடிந்து படம் வெளியான நிலையில், தற்போது... 'லியோ' படத்தின் ஒரு வார வசூல் குறித்த தகவலை படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. இதுவரை உலகம் முழுவதும் 'லியோ' 461 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாம். இதன் மூலம் இன்னும் இப்படம் 500 கோடி வசூலை கூட எட்டவில்லை என்பதை உறுதி செய்துள்ளது. நெட்டிசன்களும், 'லியோ' ஒரே வாரத்தில் வசூலில் பங்கமாக அடிவாங்கியுள்ளதாக விமர்சித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.