அந்த பழக்கத்திற்கு சிவகார்த்திகேயன் அடிமை! என்னையும் வற்புறுத்தினார்.. உண்மையை உடைத்த பிரியங்கா மோகன்!
நடிகர் சிவகார்த்திகேயன் எந்த விஷயத்திற்கு அடிமை என்பது பற்றி, பிரபல நடிகை பிரியங்கா மோகன் கூறியுள்ள தகவல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Sivakarthikeyan
சின்னத்திரையில் இருந்து, வெள்ளித்திரைக்குள் நுழைந்து... மிக குறுகிய காலத்திலேயே லட்சங்களில் இருந்து கோடிகளில் சம்பளம் வாங்க துவங்கியவர் தான் சிவகார்த்திகேயன். இவரின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் என்றால், அது சிவகார்த்திகேயன் தனக்கு ஏற்றாப்போல் காமெடி கலந்த கதாபாத்திகங்களை தேர்வு செய்து நடித்தது தான்.
தற்போது 50 கோடிக்கு மேல் சம்பளம் பெரும் சிவகார்த்திகேயன் - இமான் இடையே இருக்கும் பிரச்சனை பற்றி கடந்த ஒரு வாரமாகவே சமூக வலைதளத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இசையமைப்பாளர் இமான், சிவகார்த்திகேயன் தனக்கு வெளியே சொல்ல முடியாத துரோகத்தை செய்து விட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்க்கு இமானின் முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட் ஏதேதோ காரணங்கள் சொல்லி மழுப்பிய நிலையில், குட்டி பத்மினி, வலைப்பேச்சு பிஸ்மி உள்ளிட்ட சிலர் இமானுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இமான் சொல்வதற்கு ஆதாரம் உள்ளதாகவும் பதிலடி கொடுத்தனர்.
அனால் சிவகார்த்திகேயன் தரப்பில் இருந்து இதுவரை எந்த ஒரு விளக்கமும் கொடுக்கப்படவில்லை. அதே போல் சிவகார்த்திகேயன் ரசிகர்களும், சமூக வலைத்தளத்தில் வரிந்து கட்டிக்கொண்டு சிவகார்த்திகேயனுக்கு எதிரான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வருவதை பார்க்க முடிகிறது.
இது ஒருபுறம் இருக்க, நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக... 'டாக்டர்' மற்றும் டான் ஆகிய இரண்டு ஹிட் படங்களில் நடித்துள்ள பிரியங்கா அருள் மோகன், சிவகார்த்திகேயனின் வீக்னஸ் பற்றி தெரிவித்துள்ளார். அதாவது அவருக்கு இனிப்பு சாப்பிடுவது என்றால், மிகவும் பிடிக்குமாம். அவர் அதற்கு அமைமையாகி விட்டதாகவும், ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்போதுமே ஏதாவது இனிப்பான பலகாரங்களை சாப்பிட்டு கொண்டே இருப்பார் என தெரிவித்துள்ளார்.
அவர் சாப்பிடுவது மட்டும் இன்றி, மற்றவர்களுக்கும் கொடுத்து சாப்பிட சொல்லி வற்புறுத்துவாராம். பிரியங்கா மோகனையும் பல முறை ஸ்வீட் சாப்பிட சொல்லி வற்புறுத்தி உள்ளதாக அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சில பேட்டிகளில் கார்த்திகேயன் தனக்கு இனிப்புகள் எனறால் அதிக விருப்பம் என்பதை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D