35 லட்சமா.. நான் கேட்டதைவிட 3 மடங்கு அதிகமா கொடுத்தாங்க சாரே! ஜெயிலர் சம்பள சர்ச்சை குறித்து விநாயகன் விளக்கம்
ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்த விநாயகனுக்கு கம்மியான சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அதனை அவரே மறுத்துள்ளார்.
Rajinikanth, vinayakan
அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பின்னர் ரஜினிகாந்த் கமிட் ஆன திரைப்படம் தான் ஜெயிலர். நெல்சன் இயக்கிய இப்படம் ஆரம்பிக்கும்போதே பல்வேறு சிக்கல்கள் இருந்தன. ஏனெனில் பீஸ்ட் படத்தின் தோல்வியால், நெல்சனை இப்படத்தில் இருந்து நீக்கச் சொல்லி கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதனை நடிகர் ரஜினிகாந்தே ஆடியோ லாஞ்சில் வெளிப்படையாக கூறி இருந்தார். ஆனால் நெல்சனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், ஜெயிலர் பட கதை மீது கொண்ட நம்பிக்கையினாலும் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் ரஜினி.
Jailer varman
ரஜினி தன் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக ரஜினிகாந்திற்கு தரமான கம்பேக் படமாக ஜெயிலர் படத்தை கொடுத்து பிளாக்பஸ்டர் வெற்றியையும் ருசித்துவிட்டார் நெல்சன். ஜெயிலர் படம் தான் இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களிலேயே வசூலில் நம்பர் 1 இடத்தில் உள்ள படமாகும். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.650 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் ஹிட் அடித்துள்ளது. ஜெயிலர் படத்தின் வெற்றி விழாவும் அண்மையில் தடபுடலாக கொண்டாடப்பட்டது.
இதையும் படியுங்கள்... இதுக்குமேல வெயிட் பண்ண முடியாது... பொறுமை இழந்து விடாமுயற்சியில் இருந்து விலகிய பிரபல வில்லன் நடிகர்
vinayakan salary
ஜெயிலர் படத்தின் வெற்றி விழாவில் பேசிய ரஜினி, இப்படத்தை முதலில் பின்னணி இசை இன்றி பார்த்தபோது, படம் சுமாராக இருப்பது போல் இருந்ததாக கூறினார். அதன்பின் அனிருத்தின் இசை தான் படத்தை வேறொரு உயரத்திற்கு கொண்டு சென்றதாக பாராட்டினார். அதேபோல், ரஜினிகாந்த் அந்த விழாவில் பாராட்டிய மற்றொரு நபர் விநாயகன். ஜெயிலரின் அவரது நடிப்பை பார்த்து தானே அசந்துபோய் விட்டதாக ரஜினி கூறி இருந்தார்.
jailer movie salary details
அந்த அளவுக்கு ஜெயிலர் படத்தில் டெரர் வில்லனாக மிரட்டி இருந்த விநாயகனுக்கு அப்படத்தில் நடிக்க வெறும் ரூ.35 லட்சம் தான் சம்பளம் கொடுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதற்கு சமீபத்திய பேட்டியில் விநாயகனே விளக்கம் அளித்துள்ளார். அதன்படி தான் 35 லட்சம் வாங்கியதாக சொல்வதெல்லாம் வெறும் வதந்தி. அப்படத்தில் நடிக்க நான் கேட்ட சம்பளத்தைவிட மூன்று மடங்கு தனக்கு அதிக சம்பளத்தை தயாரிப்பாளர் வாரி வழங்கியதாக கூறி சம்பள சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விநாயகன்.
இதையும் படியுங்கள்... விபத்தில் சிக்கி விஜய் ஆண்டனி சிகிச்சையில் இருந்த போது போல்டாக மீரா செய்த செயல்..!! அப்படி செய்தவரா தற்கொலை?