விபத்தில் சிக்கி விஜய் ஆண்டனி சிகிச்சையில் இருந்த போது போல்டாக மீரா செய்த செயல்..!! அப்படி செய்தவரா தற்கொலை?
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும், விஜய் ஆண்டனியின் 16 வயது மகள் மீராவின் தற்கொலை ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவரை பற்றி தயாரிப்பாளர் டி.சிவா பேட்டி ஒன்றியில் கூறியுள்ளார்.
Vijay Antony Daughter Meera
16 வயதே ஆகும், விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா, சர்ச் பார்க் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த வயதில் இவருக்கு அப்படி என்ன மன அழுத்தம் இருக்கப் போகிறது? என்பதுதான் பலர் முன்வைக்கும் கேள்வியாக உள்ளது. மேலும் மன அழுத்தம் காரணமாக மீரா கடந்த ஒரு வருடமாகவே சிகிச்சையும் எடுத்து வந்துள்ளார் என்பது உச்சகட்ட அதிர்ச்சி.
Producer T Siva
இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் டி சிவா பகிர்ந்து கொண்டுள்ள சில விஷயங்கள் பிள்ளைகள் வைத்திருக்கும் அனைவரையுமே சிந்திக்க வைத்துள்ளது. சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு 'NO' என்பதை சொல்லி வளர்க்க வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதையும் அறிவுறுத்தியுள்ளார்.
Vijay Antony
விஜய் ஆண்டனி மகள் மீரா, தற்கொலை செய்து கொண்ட அன்று இரவு 10:00 மணி வரை அனைவரிடமும் மிகவும் மகிழ்ச்சியாக பேசிவிட்டு பின்னரே தூங்கச் சென்றுள்ளார். ஒரு மணி நேரம் தன்னுடைய லேப்டாப்பை பயன்படுத்தி உள்ளதாக போலீசார் கூறி உள்ளனர். அதன் பின்னரே இப்படிப்பட்ட முடிவை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.
Meera Suicide
தனி அறையில் படுத்திருந்த மீரா அறைக்கு காலை 3 மணி அளவில் எதேர்ச்சியாக விஜய் ஆண்டனி வந்து பார்த்தபோது தான் மீரா தூக்கில் தொங்கியது தெரிய வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் தன்னுடைய வேலை ஆட்கள் மூலம் மீராவை கீழே இறங்கி, உடனடியாக காவிரி மருத்துவமனைக்கு விஜய் ஆண்டனி மற்றும் அவருடைய மனைவி அழைத்து சென்ற நிலையில் ஏற்கனவே மீரா இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
T Siva
விஜய் ஆண்டனிக்கு மிகவும் நெருக்கமானவர்களின் ஒருவரான பிரபல தயாரிப்பாளர் டி சிவா பகிர்ந்து கொண்டுள்ள தகவலில், "மீராவின் மரணம் குறித்து கேள்விப்பட்டு, காலை 8 மணி அளவில் இருந்தே விஜய் ஆண்டனி உடன் இருந்து வருகிறேன். அவர் யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் பேசமாட்டார். பெரிதாக அவர் கோபப்பட்டு கூட யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. தன்னுடைய குடும்பத்திற்காக அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நபர். சென்னை பகுதிகளில் ஷூட்டிங் நடந்தால் ஸ்கூல் பிள்ளை போல், சரியாக ஷூட்டிங் முடிந்ததும் வீட்டிற்கு வந்து விடுவார். திரையுலகில் இருந்தாலும் அனாவசியமாக பார்ட்டி போன்றவற்றில் கலந்து கொள்ள மாட்டார். தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகள் மீது அலாதி பாசம் கொண்டவர்.
Vijay Antony Family
அருமையான தாய் தந்தைகளை கொண்ட மீரா ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார் என்பது தெரியவில்லை. ஆனால் அவருடைய வீட்டில் எந்த பிரச்சனையும் நடந்திருக்க வாய்ப்பில்லை. அதே போல் பள்ளியிலும் எந்த தொந்தரவும் அவருக்கு இருந்ததாக இதுவரை தகவல் வெளியாகவில்லை. படிப்பிலும் படு புத்திசாலித்தனமான பெண்ணாகத்தான் இருந்தார் மீரா.
Pichaikaran 2 Accident
குறிப்பாக விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படத்தின் படபிடிப்பில் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் இருந்தபோது, அவருடைய மனைவி பாத்திமா நிலைகுலைந்து போனார். அவருக்கு ஆறுதலாக இருந்தவர் மீரா தான். விஜய் ஆண்டனியின் மருத்துவ ரிப்போட்டை முழுவதும் படித்துவிட்டு, "நான் எல்லாவற்றையும் பார்த்து விட்டேன். ஒரு பிரச்சனையும் இல்லை என போட்டிருக்கிறது. எனவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இன்னும் சில மாதங்களில் அப்பா முழுமையாக குணமாகி விடுவார் என தன்னுடைய அப்பா - அம்மாவுக்கு ஆறுதல் தந்தவர். இவர் இப்படி ஒரு முடிவெடுத்தது பேரதிர்ச்சியே என கூறியுள்ளார்.
Stubborn character:
அதேபோல் எனக்கு தெரிந்தவரை மீரா கொஞ்சம் பிடிவாத குணம் கொண்டவர் என கேள்விப்பட்டேன். அவர் என்ன ஆசைப்பட்டாலும் அதை அடைந்தே தீர வேண்டும் என நினைப்பவர். அவர் நினைத்ததை உடனேயே அவருடைய பெற்றோர் வாங்கி கொடுத்து விட வேண்டும் என நினைப்பவர். இப்படி செல்லமாக வளர்ப்பதால் கூட பிள்ளைகள் சில விஷயங்கள் கிடைக்காததால் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். . எனவே பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு சிறு வயதில் இருந்தே நோ என்பதை சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும் என தயாரிப்பாளர் டி சிவா தெரிவித்துள்ளார்.
விஜய் ஆண்டனி மகள் இறப்பில் அடையாளம் தெரிந்தது!! பிரேத பரிசோதனை ரிப்போர்ட்... உறுதி செய்த போலீஸ்!
T Siva Advise
சிறுவயதில் இருந்தே அவர்கள் ஆசைப்பட்ட அனைத்தையும் நாம் வாங்கிக் கொடுத்து விடுவதால், பெரியவர்கள் ஆனதும், நாம் இல்லை என சொல்வதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என அனைத்து பிள்ளைகளை பெற்ற பெற்றோர்களுக்குமே... அறிவுறுத்தியுள்ளார்.