ஓவ்வொரு தாயின் கனவு! மகள் திருமணத்திற்காக வீட்டையே மலர் மாளிகை போல் மாற்றிய அருண் விஜய்யின் சகோதரி அனிதா!
நடிகர் அருண் விஜய்யின் அக்கா அனிதா, மகள் தியாவின் திருமணத்திற்காக வீட்டையே ஒரு மலர் மாளிகை போல் மாற்றியுள்ளார். இது குறித்த போட்டோசை அவர் வெளியிட, தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
பழம் பெரும் நடிகர் விஜயகுமாரின், இரண்டாவது மகளான மருத்துவர் அனிதாவின் மகள் தியாவின் திருமணம் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தியாவின் திருமண ஏற்பாடுகள் களைகட்டி வருகிறது. மகளின் திருமணத்தை முன்னிட்டு வீட்டையே மலர்களால் அலங்கரித்துள்ளார் அனிதா. இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில், மூத்த நடிகராக அறியப்படுபவர் விஜயகுமார். இவர் முத்து கண்ணு என்பவரை திருமணம் செய்து கொண்ட பின்னர், நடிகை மஞ்சுளாவை காதலித்து முதல் மனைவி சம்மதத்துடன் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். முத்து கண்ணுவுக்கு கவிதா, அனிதா, அருண் விஜய் என இரண்டு மகள்களும், 1 மகனும் உள்ளனர்.
இதையும் படியுங்கள்... மனைவி மோனிகா டேவிட் உடன் காத்துவாக்குல காதல் செய்த கவின் - வைரலாகும் Valentines Day போட்டோஸ்
மஞ்சுளா - விஜயகுமார் தம்பதிற்கு வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீ தேவி என மூன்று மகள்கள் பிறந்தனர். இவர்கள் மூவருமே தன்னுடைய அம்மாவை போல் ஹீரோயினாக அறிமுகமாகி, திருமணத்திற்கு பின்னர் திரையுலகில் இருந்து விலகினர்.
விஜயகுமார் குடும்பத்தை பொறுத்தவரை... எந்த ஒரு விஷேஷம் என்றாலும் ஒன்று கூடி விடுவார்கள். இவர்களின் குடும்பம் ஒன்று சேர்ந்தாலே கல்யாண் வீடு போல் அந்த இடம் காளைகட்டிவிடும். உண்மையிலே இவர்களின் குடும்பத்தில் ஒரு திருமணம் நடக்கிறது என்றால் சொல்லவா வேண்டும்... ஒட்டு மொத்த குடும்பமே, திருமண வேலைகளில் படு பிசியாக உள்ளனர்.
இதையும் படியுங்கள்... துருவ நட்சத்திரத்தை கிடப்பில் போட்டுவிட்டு; ஜோசுவா படத்தை தூசிதட்டி எடுத்த கவுதம் மேனன்- ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஆனால் இவர்களில் விதி விளக்கு என்றால்... வனிதா விஜயகுமார் தான். வனிதா தன்னுடைய அண்ணன் மற்றும் குடும்பத்தினர் மீது பாசத்தை பொழிந்தாலும், ஏனோ விஜயகுமார் குடும்பமே சில வருடங்களுக்கு முன் நடந்த பிரச்னையை காரணம் காட்டி இவரை தற்போது வரை ஒதுக்கி வைத்துள்ளனர்.
இது ஒரு புறம் இருக்க, அருண் விஜய்யின் சகோதரி... மருத்துவர் அனிதாவின் மகள் தியா திருமணம் நடைபெற இன்னும் சில தினங்களே உள்ளது. எனவே இதற்கான ஏற்பாடுகள் படு தீவிரம் அடைந்துள்ளன.
இந்த திருமணத்தில், தமிழ் திரையுலகை சேர்ந்த பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். குறிப்பாக, ரஜினிகாந்த், தனுஷ், சினேகா, அர்ஜுன் உள்ளிட்ட பல பிரபலங்களை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு தாயின் கனவு அவர்களின் மகள் திருமணம் என கூறி அனிதா விஜயகுமார்... தன்னுடைய சமூக வலைத்தளத்தில், சில மாதங்களாக மிகவும் மெனக்கெட்டு வீட்டை அலங்கரிக்க பிளான் செய்து அதை தற்போது செய்தும் காட்டியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை அவர் வெளியிட, வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.