MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • வலிமை முதல் லியோ வரை; எத்தனை கோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என சாய் பல்லவி ரிஜெக்ட் பண்ணிய படங்கள் இத்தனையா

வலிமை முதல் லியோ வரை; எத்தனை கோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என சாய் பல்லவி ரிஜெக்ட் பண்ணிய படங்கள் இத்தனையா

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் தரமான படங்களில் நடித்து வரும் சாய் பல்லவி, இதுவரை நடிக்க மறுத்த படங்களை பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 10 2024, 10:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Sai Pallavi

Sai Pallavi

தமிழ்நாட்டில் உள்ள கோத்தகிரியில் பிறந்து வளர்ந்தவர் தான் சாய் பல்லவி. ஜார்ஜியாவில் மருத்துவம் படித்த சாய் பல்லவி, படிப்பை முடித்ததும் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் முதன்முதலில் நடித்தது பிரேமம் என்கிற மலையாள படம். அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய இப்படத்தில் சாய் பல்லவி மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். முதல்படத்திலேயே தன்னுடைய க்யூட்டான நடிப்பின் மூலம் இளசுகளை கட்டிப்போட்டார் சாய் பல்லவி.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Sai Pallavi Rejected Movies

Sai Pallavi Rejected Movies

பிரேமம் படம் தமிழ்நாட்டிலும் வேறலெவலில் ஹிட் அடித்ததற்கு சாய் பல்லவியும் ஒரு முக்கிய காரணம். பிரேமம் வெற்றியை தொடர்ந்து தமிழில் தனுஷுடன் மாரி 2, ஏ.எல்.விஜய் இயக்கிய தியா போன்ற படங்களில் நடித்த சாய் பல்லவி அதன்பின்னர் டோலிவுட் பக்கம் சென்று அங்கு அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். இதையடுத்து தமிழில் கார்கி படத்தின் மூலம் வெற்றிகண்ட அவர் தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக எஸ்.கே 21 படத்தில் நடித்து வருகிறார். இப்படி பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ள சாய் பல்லவி, இதுவரை ரிஜெக்ட் பண்ணிய படங்களும் ஏராளம். அதன் பட்டியலை தற்போது பார்க்கலாம்.

37
வலிமை (Valimai)

வலிமை (Valimai)

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் ஹீரோவாக நடித்த படம் வலிமை. இப்படத்தில் ஹூமா குரேஷி நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது சாய் பல்லவி தானாம். அந்த கதாபாத்திரத்திற்கு படத்தில் பெரிய அளவில் ஸ்கோப் இல்லாததால் நடிக்க மறுத்துவிட்டாராம் சாய் பல்லவி. இதையடுத்து தான் ஹூமா குரேஷியை நடிக்க வைத்துள்ளார் வினோத்.

47
டியர் காம்ரேட் (Dear Comrade)

டியர் காம்ரேட் (Dear Comrade)

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு திரைக்கு வந்த படம் டியர் காம்ரேட். இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்தில் நடிக்க படக்குழு முதலில் அணுகியது சாய் பல்லவியை தானாம். லிப்லாக் முத்தக் காட்சி இருந்ததால் அதில் நடிக்க மறுத்துவிட்டார் சாய் பல்லவி.

இதையும் படியுங்கள்... ரவுடி பேபினா சும்மாவா... தங்கச்சி திருமண விழாவில் குடும்பத்தினருடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட சாய் பல்லவி

57
சந்திரமுகி 2 (Chandramukhi 2)

சந்திரமுகி 2 (Chandramukhi 2)

நடிகை சாய் பல்லவி கதை பிடிக்கவில்லை என்றால் எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும் நடிக்க மறுத்துவிடுவார். அப்படி அவர் ரிஜெக்ட் செய்த படம் தான் சந்திரமுகி 2. இதில் கங்கனா ரனாவத் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது சாய் பல்லவி தானாம். படத்தின் கதை கேட்டு மிகவும் கிரிஞ்ச் ஆக இருப்பதை உணர்ந்த சாய் பல்லவி உஷாராக நோ சொல்லி எஸ்கேப் ஆகிவிட்டார். படமும் அட்டர் பிளாப் ஆகிவிட்டது.

67
போலா ஷங்கர் (Bholaa Shankar)

போலா ஷங்கர் (Bholaa Shankar)

சாய் பல்லவி ரிஜெக்ட் செய்த மற்றுமொரு பிரம்மாண்ட படம் தான் போலா ஷங்கர். இது தமிழில் அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். இதில் சிரஞ்சீவியின் தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவியை அணுகியுள்ளனர். ஆனால் அவருக்கு கதை மீது ஆர்வம் இல்லாததால் நடிக்க மறுக்க, அந்த வாய்ப்பு கீர்த்தி சுரேஷுக்கு சென்றது.

77
லியோ (Leo)

லியோ (Leo)

சாய் பல்லவி நடிக்க மறுத்த படங்களில் விஜய்யின் லியோ படமும் ஒன்று. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன இப்படத்தில் திரிஷாவுக்கு முன்னர் சாய் பல்லவியை தான் விஜய்க்கு ஜோடியாக நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் அவர் நோ சொல்லிவிட்டதால் திரிஷாவுக்கு அந்த வாய்ப்பு சென்றது.

இதையும் படியுங்கள்... 23 வயதில் திருமணம்.. 30 வயதில் 2 குழந்தைக்கு தாயாக ஆசை பட்ட சாய் பல்லவி! கல்யாணத்தை தள்ளி போட்டது ஏன்?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சாய் பல்லவி
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved