எதிர்நீச்சல் மாரிமுத்து நடித்த உலகம்மை முதல் ஆர் யூ ஓகே பேபி வரை.. இந்த வார தியேட்டர் & OTT ரிலீஸ் படங்கள் இதோ
தமிழ் சினிமாவில் வருகிற செப்டம்பர் 22-ந் தேதி தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீசாகும் திரைப்படங்களின் பட்டியலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Sep 22 release movies
செப்டம்பர் மாதம் தொடங்கியதில் இருந்தே நிறைய பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீசாகி வருகின்றன. செப்டம்பர் 1-ந் தேதி குஷி திரைப்படம் வெளியாகி வெற்றிபெற்றது. அதேபோல் செப்டம்பர் 7-ந் தேதி ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் திரைக்கு வந்து வசூலை வாரிக்குவித்தது. இதற்கு அடுத்தபடியாக விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக விஷாலின் மார்க் ஆண்டனி படம் வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகிறது. இந்த நிலையில், வருகிற செப்டம்பர் 22-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ள தமிழ் படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஆர் யூ ஓகே பேபி
லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ஆர் யூ ஓகே பேபி. இப்படத்தில் சமுத்திரக்கனி, மிஷ்கின் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து உள்ளார். இப்படம் செப்டம்பர் 22-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
டீமன்
ரமேஷ் பழனிவேல் இயக்கத்தில் உருவாகி உள்ள டீமன் திரைப்படமும் இந்த வாரம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் இயக்குனர் ரமேஷ் பழனிவேல் இயக்குனர் வசந்த பாலனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆவார். சச்சின் கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் நடிகை அபர்ணதி ஹீரோயினாக நடித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... என்னடா ஹேர்ஸ்டைல் இது... எமி ஜாக்சனின் ஏடாகூடமான கட்டிங்கை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்
உலகம்மை
விஜய் பிரகாஷ் இயக்கத்தில் கெளரி கிஷான் கதையின் நாயகியாக நடித்துள்ள திரைப்படம் உலகம்மை. எதிர்நீச்சல் தொடரின் மூலம் பேமஸ் ஆனவரும், சமீபத்தில் மரணமடைந்தவருமான மாரிமுத்துவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படமும் செப்டம்பர் 22-ந் தேதி திரைக்கு வர உள்ளது.
மற்ற படங்கள்
சலங்கைதுரை இயக்கியுள்ள கடத்தல், யாழ் குணசேகரனின் கெழப்பய, ராகுல் ஆர் கிருஷ்ணா இயக்கிய ஐமா ஆகிய சிறுபட்ஜெட் படங்களும் செப்டம்பர் 22-ந் தேதி திரைகாண உள்ளன. இவற்றுடன் எக்ஸ்பெண்டபிள்ஸ் என்கிற ஹாலிவுட் படத்தின் நான்காம் பாகமும் இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸ் ஆக உள்ளது.
ஓடிடி ரிலீஸ் படம்
ஓடிடியில் இந்த வாரம் ஒரே ஒரு தமிழ் படம் தான் ரிலீஸ் ஆகி உள்ளது. அது டைனோசர்ஸ். இப்படம் அமேசான் பிரைம் மற்றும் சிம்ப்ளி சவுத் ஆகிய ஓடிடி தளங்களில் ரிலிஈஸ் ஆகி உள்ளது. இப்படத்துக்கு போட்டியாக வேறு எந்த தமிழ் படமும் ஓடிடியில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... கோட் - சூட்டில் த்ரிஷா நடத்திய கலக்கல் போட்டோ ஷூட்! 40 வயதிலும் நியூ லுக்கில்... ரசிகர்களை மயக்கிய போட்டோஸ்!