கோட் - சூட்டில் த்ரிஷா நடத்திய கலக்கல் போட்டோ ஷூட்! 40 வயதிலும் நியூ லுக்கில்... ரசிகர்களை மயக்கிய போட்டோஸ்!
சவுத் குயின் த்ரிஷா, கோட் - சூட்டில் நடத்தியுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Trisha Krishnan Comeback Movie:
நடிகை த்ரிஷா, கடந்த சில வருடங்களாகவே தென்னிந்திய திரையுலகில் நிலையான ஒரு வெற்றி படத்தை கொடுக்க போராடி வந்த நிலையில், சமீபத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் இவரின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
Kundhavai Trisha
நந்தினியாக நடித்த உலக அழகி ஐஸ்வர்யா ராய்யை விட, 'குந்தவை' கதாபாத்திரத்தில் நடித்த, த்ரிஷா தான் ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தார். த்ரிஷா தான் குந்தவை கதாபாத்திரத்திற்கான சரியான தேர்வு என ரசிகர்கள் இயக்குனர் மணிரத்னத்தை புகழ்ந்து தள்ளினர்.
Trisha Acting Leo:
'பொன்னியின் செல்வன்' வெற்றிக்கு பின்னர், தளபதி விஜய்க்கு ஜோடியாக லியோ படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் கைப்பற்றினார் த்ரிஷா. அதே போல் இவர் கதையின் நாயகியாக நடித்துள்ள, 'தி ரோட்' படம் விரைவில் ரிலீசாக உள்ளது.
Trisha Next Movie Vidamuyarchi:
இதை தொடர்ந்து தல அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா 'விடாமுயற்சி' படத்தில் நடிப்பதும் உறுதியாகியுள்ளது. அதே போல், ரஜினிகாந்த் இயக்குனர் டி.ஜெ.ஞானவேல் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்திலும், கமல்ஹாசன் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்திலும் த்ரிஷா ஹீரோயினாக நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், இதுவரை அந்த தகவல் உறுதியாகவில்லை.
Trisha Salary:
பொன்னியின் செல்வன் படத்திற்கு பின்னர், த்ரிஷாவின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் எகிறியுள்ள நிலையில், சம்பளத்தையும் 3 கோடியில் இருந்து 5 கோடிக்கு ஏற்றி விட்டதாகவும், கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
Trisha stylish Photo Shoot:
சமூக வலைத்தளத்திலும் செம்ம ஆக்டிவாக இருக்கும் த்ரிஷா, அவ்வப்போது... வெளியிடங்களுக்கு செல்லும் போது எடுத்து கொள்ளும் வீடியோஸ் மற்றும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் வெள்ளை நிற ஷர்ட் அணிந்து, மிகவும் ஸ்டைலிஷான கோட் - சூட்டில் அல்ட்ரா மாடர்ன் பேபியாக மாறி எடுத்துக்கொண்டுள்ள போட்டோஸ் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
பொண்ணு பார்க்க போன போது... பெண்களிடம் ஆண்கள் கேட்க கூடாத கேள்வியை மனைவியிடம் கேட்ட அருண் விஜய்!