தீபாவளி ரேஸில் இணைந்த திரிஷா படம்... ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
கோலிவுட்டின் டாப் ஹீரோயினான நடிகை திரிஷா கதையின் நாயகியாக நடித்த தி ரோடு படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
Trisha
நடிகை திரிஷாவுக்கு வயது 40-ஐ நெருங்கிவிட்டாலும் தற்போது தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயினாக வலம் வந்துகொண்டிருக்கிறார். தற்போது கோலிவுட்டில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித், கமல் ஆகியோரின் படங்களெல்லாம் திரிஷா கைவசம் உள்ளன. விஜய்க்கு ஜோடியாக அவர் நடித்த லியோ படம் மாபெரும் வெற்றி அடைந்ததை அடுத்து தற்போது அஜித்துக்கு ஜோடியாக விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் திரிஷா.
Trisha Krishnan
விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் தக் லைஃப் படத்திலும் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகி இருக்கிறார் திரிஷா. இப்படத்துக்கான அறிவிப்பும் நேற்று வெளியானது. இப்படி டாப் ஹீரோக்களுடன் நடித்தாலும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார் திரிஷா.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
The Road movie Trisha
அந்த வகையில் அவர் நடித்த படம் தான் தி ரோட். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவான இப்படம் கடந்த அக்டோபர் 6-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இப்படத்தை அருண் வசீகரன் என்பவர் இயக்கி இருந்தார். இதில் திரிஷா உடன் சந்தோஷ் பிரதாப், எம்.எஸ்.பாஸ்கர், மியா ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
The Road OTT release date
இந்நிலையில், தி ரோட் திரைப்படம் ஓடிடி ரிலீசுக்கு தயாராகி உள்ளது. அதன்படி தீபாவளியை முன்னிட்டு வருகிற நவம்பர் 10-ந் தேதி இப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் நடிகை திரிஷாவும் தீபாவளி ரேஸில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... லண்டனில் சொகுசு வீடு, பிரைவேட் ஜெட் என ரியல் லைஃபிலும் பிக்பாஸ் ஆக வாழும் கமல்ஹாசனின் சொத்து மதிப்பு இவ்வளவா?