என்ன சொல்றிங்க இதெல்லாம் இளையராஜா பாட்டு இல்லையா..? ரசிகர்களை பல ஆண்டுகளாக குழப்பி வந்த சில கோலிவுட் பாடல்கள்!
கடந்த 47 ஆண்டுகளாக தமிழ் திரை உலகில் இசை ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர் தான் இசைஞானி இளையராஜா அவர்கள். பல தலைமுறை நடிகர்கள் இவருடைய இசையால் மெருகேறியுள்ளனர் என்றால் அது மிகையல்ல.
Oru Kadhal Devathai
ஆனால் சில சமயங்களில் வேறு சில இசையமைப்பாளர்கள் இசை அமைத்த பாடல்களை, நாம் இளையராஜாவின் பாடல் என்று நம்பி மெய் மறந்து கேட்டிருப்போம். காரணம் அந்த அளவுக்கு இளையராஜாவினுடைய இசை நம்மை மயக்கும் திறன் கொண்டது.
அந்த வகையில் கடந்த 1989 ஆம் ஆண்டு வெளியான "இதய தாமரை" என்ற திரைப்படத்தில் வந்த "ஒரு காதல் தேவதை பூமியில் வந்தால்" என்கின்ற பாடல் எஸ்.பி பாலசுப்பிரமணியன் மற்றும் சித்ரா குரலில் அமைந்திருக்கும். இன்றளவும் இந்த பாடலுக்கு இசையமைத்தது இளையராஜா என்று பலர் நினைத்து வரும் நிலையில், உண்மையில் "இதய தாமரை" திரைப்படத்திற்கு இசை அமைத்தது சங்கர் கணேஷ் அவர்கள். சங்கர் கணேஷ் அவர்களும் 80களுடைய முற்பகுதியிலிருந்து மிகப்பெரிய இசையமைப்பாளராக திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Kannukul Nooru Nilava
அதேபோல 1987 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான "வேதம் புதிது" என்ற திரைப்படம் பலரையும் மிகப்பெரிய அளவில் கவர்ந்தது. குறிப்பாக இந்த திரைப்படத்தில் வரும் "கண்ணுக்குள் நூறு நிலவா" என்கின்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டான ஒரு பாடல் என்றே கூறலாம். இந்த பாடலுக்கும் பல ஆண்டுகாலமாக இளையராஜா அவர்கள் தான் இசையமைத்துள்ளார் என்று பலரும் நினைத்து வந்த நிலையில், உண்மையில் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்து, அந்த அருமையான பாடலை கொடுத்தது தேவேந்திரன் என்கின்ற இசையமைப்பாளர் ஆவார்.
Enakena piranthava
அதேபோல கடந்த 1991 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் பிரபு மற்றும் குஷ்பூ நடிப்பில் வெளியான "கிழக்குக்கரை" என்ற திரைப்படத்தில் வெளியான "எனக்கென்ன பிறந்தவ, றெக்கை கட்டி பறந்தவ இவதான்" என்கின்ற பாடல், இளையராஜா அவர்களுடைய இசையில் வெளியான பாடல் என்று பலரும் நினைத்திருப்போம். உண்மையில் இது தேனிசை தென்றல் தேவா அவர்களுடைய பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு காட்சிக்கு அனுமதி தர மறுக்கும் அரசு... விஜய்யின் லியோ ரிலீஸ் தேதியை மாற்ற திட்டம்!