Actress Ivana : செம ஸ்டைலிஷ் லுக்.. கியூட்டான பியூட்டியில் அசத்தும் நடிகை இவானா - லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ!
Actress Ivana : கேரளாவில் கடந்த 2000வது ஆண்டு பிறந்த நடிகர் தான் அலீனா ஷாஜி என்ற இயற்பெயர் கொண்ட நடிகை இவானா. மலையாள மொழியில் குழந்தை நட்சத்திரமாக இவர் அறிமுகமானார்.
Actress Ivana Photos
அதன் பிறகு ஒரு சில மலையாள திரைப்படங்களில் நடித்த இவர், தமிழில் கடந்த 2018 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான "நாச்சியார்" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.
Ivana Photos
தமிழில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான பிரதீப் ரங்கநாதனின் "லவ் டுடே" திரைப்படம் இவருக்கு ஒரு மிகப்பெரிய பெயரை பெற்று தந்தது. அவருக்கு திரையுலகில் திருப்புமுனையாக அமைந்த ஒரு திரைப்படம் இதுவென்றால் அது மிகையல்ல.
Ivana
தற்பொழுது தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் நடித்து வரும் இவானா நடிப்பில் அண்மையில் கல்வன் என்கின்ற திரைப்படம் தமிழில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Actress Ivana
செல்பிஷ் என்ற தெலுங்கு படத்தில் இப்பொது நடித்து வருகின்றார் இவானா. இது தான் அவருடைய முதல் தெலுங்கு திரைப்படமாகும்.