ஹீரோயின் ஓகே சொன்னாலும்.. நாங்க வேண்டான்னு தான் சொல்லுவோம் - லிப் லாக் கட்சிகளுக்கு நோ சொல்லிய நடிகர்கள்!
ஒரு சினிமா என்பது பல வகையான காட்சிகளின் தொகுப்பு என்பதை நாம் அறிவோம். அந்த வகையில் காமெடி, ஆக்சன், சென்டிமென்ட் போல ரொமான்ஸ் காட்சிகளுக்கான ரசிகர்களும் உலக சினிமா அரங்கில் அதிகம் உண்டு.
Actor Udhayanidhi Stalin
உதயநிதி ஸ்டாலின் இவர் மாமன்னன் படத்திற்கு பிறகு எந்த படத்தில் நடிக்க போவதில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தாலும் இவர் நடித்து வந்த காலகட்டங்களில் இவருக்கு அறவே வராத ஒரு விஷயம் என்று அவரே கூறியது ரொமான்ஸ் மட்டும் தான். ஆகையால் இவரும் நடிகைகளுடன் நெருக்கமான காட்சிகளிலும் குறிப்பாக லிப் லாக் காட்சிகளிலும் நடிக்க ஆரம்பத்திலிருந்து மறுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது.
Actor Suriya
ஆனால் ஹீரோயின்களுடன் ரொமான்ஸ் செய்யும்பொழுது சில சமயங்களில் ஹீரோயின்கள் ஒப்புக்கொண்டாலும், சில ஹீரோக்கள் முத்த கட்சிகளில் அதிலும் குறிப்பாக லிப் லாக் காட்சிகளில் நடிக்க ஒப்புக் கொள்வதில்லை. அதில் முக்கியமானவர் சூர்யா, இவர் இரட்டை வேடத்தில் நடித்த மாற்றான் திரைப்படத்தில் காஜல் அகர்வால் உடன் ஒரு முத்த காட்சி இருந்த பொழுதும், அதனை நடிக்க மறுத்து, இறுதியில் அது CG தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.
Actor Sivakarthikeyan
நடிகர் சிவகார்த்திகேயன், இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தான் முன்னணி நடிகராக மாறினார் என்று பொழுதும் ஹீரோயின்களுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளில் சற்று தூரத்தில் நின்று நடித்து வருகிறார். இவர் இதுவரை எந்த நடிகையுடனும் கிசுகிசுப்பில் சிக்கவில்லை என்பதே அதற்கு சாட்சி. இவரும் லிப் லாக் காட்சிகளில் நடிக்க பெரிதலமும் விரும்பாத நடிகர்.
நடிகர் விஜய் சேதுபதி, இவர் யாருக்கு வேண்டுமானாலும் கன்னத்தில் முத்தம் கொடுப்பார் ஆனால் ஹீரோயின்களுடன் லிப் லாக் காட்சிகள் வைக்க வேண்டும் என்று கூறினாலே உடல் வெலவெலத்து விடுமாம். மிக நேர்த்தியான நடிகர் என்று பொழுதும் லிப் லாக் காட்சிகளில் நடிப்பதை இவர் தவிர்த்து வருகிறார்.
சீரியல் நடிகை மகாலக்ஷ்மியின் கணவர் ரவீந்திரன் அதிரடி கைது! 16 கோடி மோசடி செய்தது நிரூபணம்!