ஜப்பானுக்கு அடித்த ஜாக்பாட்... 6 நாள் சிறப்பு காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி - FDFS எப்போ தெரியுமா?
கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ள ஜப்பான் படத்துக்கு சிறப்பு காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
japan karthi
பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பின் நடிகர் கார்த்தி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் ஜப்பான். ராஜு முருகன் இப்படத்தை இயக்கி உள்ளார். இவர் இதற்கு முன்னர் குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி போன்ற படங்களை இயக்கியுள்ளார். ஜப்பான் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இது நடிகர் கார்த்தியின் 25-வது படமாகும்.
japan movie
ஜப்பான் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 10-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு நாளே உள்ளதால் அதன் புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ஜப்பான் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். ஜப்பான் படத்திற்கு சிறப்பு காட்சி இருக்குமா? இருக்காதா? என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
japan Diwali release
ரசிகர்கள் ஆசையை பூர்த்தி செய்ய ஜப்பான் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரி ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டது. அதை ஏற்ற அரசு, ஜப்பான் படத்தின் சிறப்பு காட்சியை திரையிட அனுமதி வழங்கி இருக்கிறது. இதனால் ஜப்பான் படத்தின் முதல் காட்சி நாளை காலை 9 மணிக்கு திரையிடப்பட உள்ளது உறுதியாகி உள்ளது.
japan special shows
மேலும் ஜப்பான் படம் தீபாவளி விடுமுறையில் ரிலீஸ் ஆவதால் நவம்பர் 10ந் தேதி முதல் 15-ந் தேதி வரை 6 நாட்கள் சிறப்பு காட்சிகளை திரையிட்டுக்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. இதனால் ஒரு நாளை 5 காட்சிகள் வீதம் காலை 9 மணிக்கு முதல் காட்சி நள்ளிரவு 1.30 மணிக்கு கடைசி காட்சி முடிவடைய வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தி உள்ளது. இதனால் கார்த்தி ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.
இதையும் படியுங்கள்... நீதிமன்றமாக மாறிய பிக்பாஸ் வீடு... வழக்கு தொடுத்த போட்டியாளர்கள் - பிரதீப்புக்கு நீதி கிடைக்குமா?