Kitchen Tips : இப்படி செஞ்சா ஒரு மாதம் வரை பச்சை மிளகாய் அழுகி போகாது! ட்ரை பண்ணி பாருங்க..
பச்சை மிளகாய் எப்போதும் புதிதாக இருக்க என்ன செய்வதென்று யோசிக்கிறீர்களா? இதோ உங்களுக்கான சில அற்புதமான குறிப்புகள்.
பச்சை மிளகாய் பயன்படுத்துவது சமையலறையில் மிகவும் பொதுவானது. அதே சமயம் பச்சை மிளகாய் உணவுக்கு சுவையையும் கொடுக்கும். மேலும், அதை வீட்டில் நீண்ட நாள் புதியதாக வைத்திருக்க முடியாது.
ஏனெனில், அது விரைவில் காய்ந்த மிளகாயாக மாறிவிடும். பச்சை மிளகாய் எப்போதும் புதிதாக இருக்க என்ன செய்வதென்று யோசிக்கிறீர்களா? இதோ உங்களுக்கான சில அற்புதமான குறிப்புகள்.
ஜிப்லாக் பை: இதற்கு பச்சை மிளகாயை வாங்கி வந்தவுடன் நன்கு கழுவி, ஈரம் இல்லாமல் காய வைக்கவும். பிறகு அதிலிருந்து தண்டுகளை நீக்கி, பச்சை மிளகாயை ஜிப் லாக் பையில் வைத்தால், குறைந்தது ஒரு மாதமாவது பிரஷ்ஷாக இருக்கும். முக்கியமாக அதில் காற்று இருக்கக் கூடாது. வேண்டுமானால் நீங்கள் ஃப்ரீசரில் கூட வைக்கலாம்.
பிளாஸ்டிக் பை: உங்களிடம் ஜிப் லாக் பை இல்லை என்றால், பிளாஸ்டிக் பையில் காற்று புகாதபடி பச்சை மிளகாய் ஈரம் இல்லாமல் பையில் போட்டு, பின் அதை நன்றாக கட்டி ஃப்ரீசரில் வையுங்கள். இதனால் மிளகாய் கணக்கில் புதியதாக இருக்கும்.
இதையும் படிங்க: Cooking Tips : சமையலுக்கு தேவையான சின்ன சின்ன முக்கிய குறிப்புகள்.. கண்டிப்பா ட்ரை பண்ணுங்க..
டிஷ்யூ பேப்பர்: பச்சை மிளகாய் சேமிக்க டிஷ்யூ பேப்பரை பயன்படுத்தலாம் இதற்கு பச்சை மிளகாயை நன்கு கழுவி, அதே ஒரு குளிர்ந்த தண்ணீர் ஊற வைக்கவும். பிறகு பச்சை மிளகாயின் தண்டுகளை நீக்கி, காய வைக்கவும். நன்கு காய்ந்ததும் அதே டிஷ் பேப்பரில் போட்டு நன்றாக மடிக்கவும். இப்படி செய்தால் பச்சை மிளகாய் ஒரு மாதத்திற்கு புதியதாக இருக்கும்.
இதையும் படிங்க: Kitchen Tips : வருடம் ஆனாலும் அரிசி, பருப்பில் வண்டு வராது.. ஸ்டோர் பண்ண சூப்பர் டிப்ஸ்!
கெட்டுப்போன பச்சை மிளகாய்: பச்சை மிளகாய் நீளம் மாத தொடங்கினால் அது கெட்டுப் போய்விட்டது என்பதை அறியலாம். இப்படிப்பட்ட மிளகாய் உடனே தூக்கி எறியுங்கள். இல்லையெனில், அது மற்றதை கெடுத்து விடும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D