- Home
- Gallery
- Cooking Tips : சமையலுக்கு தேவையான சின்ன சின்ன முக்கிய குறிப்புகள்.. கண்டிப்பா ட்ரை பண்ணுங்க..
Cooking Tips : சமையலுக்கு தேவையான சின்ன சின்ன முக்கிய குறிப்புகள்.. கண்டிப்பா ட்ரை பண்ணுங்க..
சமைக்கும் போது நீங்கள் சில நுணுக்கங்களை மட்டும் பின்பற்றினால் போதும், உணவின் சுவை அருமையாக இருக்கும். அந்த தந்திரங்களை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

ஒவ்வொரு பெண்ணும் தான் சமைப்பது மிகவும் சுவையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறாள். ஆனால் எல்லோருடைய கைகளிலும் அந்த மந்திரம் இருப்பதில்லை.
சிலர் எந்த முயற்சியும் இல்லாமல் சமைத்தால் கூட உணவு அருமையாக இருக்கும். ஆனால், சில பெண்களோ ரொம்பவே முயற்சி செய்து சமைத்தாலும் கூட உணவு சுவையாக இருக்காது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், நீங்களும் இந்த பிரச்சினையை சந்திக்கிறீர்களா.?
உண்மையில், சமையலில் சில நுணுக்கங்கள் உள்ளது. எனவே, சமைக்கும் போது அந்த நுணுக்கங்களை மட்டும் நீங்கள் பின்பற்றினால் போதும், உணவின் சுவை அருமையாக இருக்கும். அந்த தந்திரங்களை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.த
க்காளி சாதம், லெமன் தான், குஸ்கா, பிரியாணி போன்வற்றைக் குக்கரில் செய்யும் போது, மூடியைத் திறந்தவுடனே எலுமிச்சைச் சாறை அதன் மேல் சிறிதளவு பிழிந்து கிளறிவிட்டால், சாதம் கொழயாம்ல் உதிரியாக இருக்கும்.
வாழைப்பூவை நீங்கள் பிரித்தெடுக்கும் போது அது விரைவில் கருமையாக மாறிவிடும். எனவே, இதைத் தவிர்க்க உப்பு மற்றும் மஞ்சள் கலந்த தண்ணீரில் பிரித்தவுடனே போடுங்கள். பூ கறுக்காது.
இதையும் படிங்க: Kitchen Tips : பெண்களே.. கிச்சனில் வேலையை எளிதாக்க சூப்பரான டிப்ஸ் இதோ..!!
உங்கள் வீட்டில் பக்கோடா செய்யும் போது மொறு மொறுப்பாக வர வேர்ககடலையை பொடியாக்கி அதை கடலைமாவில் கலக்கவும்.
இதையும் படிங்க: குழம்பு, கிரேவி, கூட்டு எதுல காரம் அதிகமானாலும் இப்படி செய்ங்க.. காரம் குறைஞ்சிடும்!
சேனைக்கிழங்கு மற்றும் கருணைக்கிழங்கு சாப்பிட்ட பிறகு நாக்கு அரிக்கும். எனவே, இதை தடுக்க சேனைக்கிழங்கை புளிநீரில் வேக வைத்து சாப்பிட்டால் நாக்கு அரிக்காது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D